Author: முத்தையா

Category: அரசியல்

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் தெற்கு நகர திமுக சார்பில் நேற்று இரவு 2 ஆண்டு திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் உழவர் அருகிலுள்ள காந்தி சிலை முன்பு   நாமக்கல் தெற்கு நகர திமுக செயலாளர் ராணா ஆர். ஆனந்த் தலைமையில் நடந்த  இந்த திராவிட மாடல் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ. இராமலிங்கம் உட்பட பலர் பேசினர்.

சிறப்பு பேச்சாளராக நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஷ்குமார் பேசும்பொழுது :- 

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட பொழுது இருந்த நிலை குறித்தும் அப்போது கொரோனா பாதிப்பில் மக்கள் இருந்த நிலை குறித்தும் அதிமுக அரசு அது குறித்து அக்கறை செலுத்தாமல் பொதுமக்களுக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் மு .க.ஸ்டாலின் வழங்கக் கோரிய ரூபாய் 5000 தராமல் ரூபாய் 1000 மட்டும் கொடுத்திருந்ததையும் அதை ஆட்சிக்கு வந்தால் நாங்கள் தருவோம் என்று வாக்குறுதி கொடுத்திருந்த தமிழக முதல்வர் வந்தவுடன் முதல் கையெழுத்தாக அதை தந்தார் என்றும்

அடுத்தடுத்து பல்வேறு சாதனைகளை இந்த இரண்டு ஆண்டுகளில் செய்து வருவதாகவும் தெரிவித்த கே ஆர் என் இராஜேஷ்குமார் எம்.பி.பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் மு .க.ஸ்டாலின் நாமக்கல் நகருக்கும் நாமக்கல் மாவட்டத்திற்கும் பல்வேறு திட்டங்களை கொடுத்து வருவதாகவும் அதற்காக வேண்டிய நிதி ஒதுக்கி தந்து கொண்டு செயல்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

அப்போது மேலும் பேசிய அவர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நாமக்கல் மோகனூர் அருகே சிப்காட் தொழில் பேட்டை அமைக்க தமிழக அரசு முடிவு எடுத்து நடவடிக்கை எடுத்து வருவதை ஒரு சிலர் தடுக்க முயற்சி செய்து வருவதாகவும் அவர்களுக்கு அதில் என்ன சுயலாபம் இருக்கிறது என்று தெரியவில்லை என்றும்,

அது சிப்காட் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் 50 சதத்திற்கு மேல் பொறம்போக்கு நிலம் என்றும் விவசாய நிலம் வானம் பார்த்த பூமியாக இருந்து வருகிறது என்றும் அந்த இடத்தை சிறந்த ஒரு சிப்காட் தொழில்பேட்டை மையமாக மாற்றுவதற்கு எடுக்கும் முயற்சிக்கு இடையூறாக சிலர் இருப்பதாகவும்,

திமுக அரசு எடுக்கும் அந்த நல்ல முயற்சிக்கு அவர்கள் முட்டுக்கட்டை போட முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டிய கே. ஆர். என். இராஜேஷ்குமார் அங்கு சிப்காட் தொழில் பேட்டையை திமுக அரசு கண்டிப்பாக அமைக்கும் அது யார் தடுத்தாலும் நிற்காது என்றும் இது படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்கான திட்டம் என்றும் அப்போது அவர் உறுதியாக தெரிவித்தார்.

இந்த பொதுக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Tags:

#namakkalnews , #namakkalnewsintamil , #namakkalnewslive , #namakkalnewstoday , #namakkalnewstodaytamil , #dravidamodel #dmk #stalin #mkstalin #cmstalin #namakkalnewtodayslive #namakkalnewspapertoday , #இன்றையசெய்திகள்நாகை , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltamilnadu , #indrayaseithigalnagapattinamtamilnadu , #todaynewstamilnadu , #TheGreatIndiaNews #Tginews , #news , #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #namakkaltodaynews , #namakkallatestnews , #namakkalnews , #Latesttamilnadunewstamil , #spiritual #devotional #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0