• முகப்பு
  • சென்னை
  • திமுக அரசில் தங்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லையென கூறி தலைமை செயலகத்தை நோக்கி பேரணி.

திமுக அரசில் தங்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லையென கூறி தலைமை செயலகத்தை நோக்கி பேரணி.

பிரவீன்

UPDATED: May 23, 2023, 6:39:41 AM

தமிழ்நாடு அரசு துறைகளில் போக்குவரத்து சட்டவிதிகளை மீறி  தற்போது வரை 3,000 ஆயிரம் காலவதி ஆன வாகனங்கள் இயக்கத்தில் உள்ளன இது குறித்து அரசு உயர் அலுவலர்கள், 

துறையின் செயலாளர்கள், முதலமைச்சர் முக ஸ்டாலின் இடமும் நேரில் சென்று பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் பயன் இல்லையென கூறி சென்னை எழும்பூரிலிருந்து கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல முயச்சித்தனர்.

அவர்களை தடுத்த காவல்துறையினர் அவர்களை லேங்க்ஸ் தோட்ட சாலையிலிருந்து புதுபேட்டை வழியாக ராஜரத்தினம் மைதானம் வரை அழைத்து வந்தனர்.

பின்னர் அங்கு கூடிய அரசுத்துறை ஓட்டுனர்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை தமிழக அரசு வழங்கிட வேண்டும்,

அனைத்து துறைகளிலும் உள்ள ஓட்டுநர் காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும்,

ஓட்டுநர்களுக்கு தர ஊதிய முரண்பாட்டை களைந்து புதிய ஊதிய திருத்தம் அமுல்படுத்திட வேண்டும்,

ஓட்டுநர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்திட வேண்டுமென கோஷமிட்டனர் அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் சுப்ரமணி இதுவரை 3,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் அரசுத்துறையில் வாகன பதிவுகள் காலாவதியான வாகனங்களை இயக்க ஓட்டுனர்கள் வற்புறுத்தபடுகின்றனர், இதனால் இந்த அரசில் தங்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லையென்றும்,

அரசிடம் பலமுறை முறையிட்டும் எந்த பலனும் இல்லையென்றும் இன்று கோட்டை நோக்கி பேரணி செல்ல முயன்றதாகவும், அரசு தங்களை இனியாவது கவனத்தில் கொண்டு புதிய வாகனங்களை வழங்க வேண்டுமென்று கூறினார்.

இந்த பேரணியில் கலந்துகொண்ட ஓட்டுனர்கள் தங்களின் கோரிக்கை அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு நடனம் ஆடி அரசின் கவனத்தை ஈர்த்தனர்...

பேட்டி: சுப்ரமணி தலைவர் தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் தலைமை சங்கம்

VIDEOS

RELATED NEWS

Recommended