Author: மாரிமுத்து

Category: குற்றம்

எனது கணவர் சாவுக்கு காரணம் திமுகவும் மாநகராட்சியும் தான்  கண்ணீர் மல்க கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கியபுரம் அய்யர்வினளனய சேர்ந்த ஜெய கணேசன் மனைவி லிங்க சிவா மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளித்துள்ள மனுவில் எனக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி மடத்துறை சேர்ந்த நடராஜன் மகன் ஜெய கணேசன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

எங்களுக்கு பொன் நதிஸ் 11 வயது ஜெய் விஸ்வா வயது 8 இரண்டு மகன்கள் உள்ளனர், எனது கணவர் ஜெய கணேசன் விவசாய வேலை பார்த்து விவசாய பொருட்களை தூத்துக்குடி காமராஜ் காய்கறி அங்காடியில் வைத்து விற்பனை செய்து வருவார்.

இந்த நிலையில் எனது கணவர் வழக்கம் போல கடந்த 25ஆம் தேதி காலை 5 மணிக்கு கீரை கட்டுகளை விற்பனை செய்து விட்டு காலை 6 மணி அளவில் காய் கனி அங்காடி அருகில் உள்ள அண்ணா சிலையை சுற்றியுள்ள இரும்பு கம்பியை எனது கணவர் தொட்ட போது மேற்படி சிலைக்கு சுற்றிலும் அலங்கார மின்விளக்குகளுக்கு இணைக்க பெற்றிருந்த மின்சாரம் மேற்படி கம்பியில் கசிவு ஏற்பட்டு அதன் வாயிலாக எனது கணவர் மீது மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்து விட்டார்.

மேற்படி சிலையின் பராமரிப்பினை தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகம் செய்து வருகிறது, மேலும் மேற்படி சிலையானது திமுக நிர்வாகத்தால் நிறுவப்பட்டது.

அதற்குரிய ஆதாரம் இணைத்துள்ளேன் மேற்படி மின்சார இணைப்பானது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பேரில் உள்ளது.

மின்சார இணைப்பு தூத்துக்குடி நகரம் மின்சார வாரியம் வழங்கி உள்ளது மேற்படி சிலையை சுற்றி மின்சார வயர்கள் பொருத்தப்பட்டு அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்படி சிலை பொது இடத்தில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் மேற்படி கம்பியில் இணைக்கப்பட்டுள்ள மின்சார இணைப்பை சரியான மற்றும் பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை கவனிக்கும் பொறுப்பு மேற்படி மின்சார வாரியத்துக்கு இருக்கிறது.

அவர்களின் கவனக்குறைவால் மேற்படி மின்கசிவு ஏற்பட்டு அவர்கள் கவனிக்க தவறியதால் எனது கணவர் இறந்து விட்டார் ஆகையால் மேற்படி திமுக மாவட்ட கழகம், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர்கள் ஆகிய தரப்பினர் அஜாக்கிரதையாலும் கவனக்குறைவாலும் பொறுப்பற்ற தன்மையினாலும் அவர்களது பணியை சரியாக செய்யாததாலும் மேற்படி எனது கணவர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கணவர் உயிர் இழப்புக்கு இவர்களே காரணமானவர்கள் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட திமுக நிர்வாகம்.

எனது கணவர் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனது கணவர் இறப்பினால் எனது குழந்தை எதிர்காலம் மற்றும் எனது வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, ஆகையால் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட திமுகவிடமிருந்து 1 கோடி ரூபாய் இழப்பு பெற்று தர வேண்டும்.

மேலும் அஜாக்கிரதையாக செயல்பட்ட தூத்துக்குடி திமுக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஆணையர் மற்றும் நகர மின்சார வாரியம் ஆகியோர் மீது தகுந்த விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

எனது கணவர் மின் கசிவால் இறந்ததால் என் குடும்பம்  நடுத்தெருவில் உள்ளது என்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் எனக்கும் இதனால் எந்த வித வாழ்வாதரும் இல்லாமல் செய்து விட்டார்கள் ஆகையால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அதுபோல எனக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் மாலை சூடி அற்புதராஜ் கூறுகையில் இந்த அண்ணா சிலை தற்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலினால் துணை முதலமைச்சர் ஆக இருந்தபோது திறக்கப்பட்டது,

இது முழுக்க முழுக்க திமுக தான் பராமரித்து வருகிறது, ஆகையால் மின் கசிவு ஏற்பட்ட காரணத்தினால் உயிரிழந்த ஜெயகணேசன் மனைவிக்கு மாநகராட்சி அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை வழங்க வேண்டும்.

மேலும் 1 கோடி ரூபாய் இழப்பு குடும்பத்திற்கு கொடுக்க வேண்டும் இதுவரை எந்த ஒரு அரசு அதிகாரிகளும் மின் கசிவு ஏற்பட்டு இறந்த ஜெய கணேசன் மனைவியை சந்தித்து ஆறுதல் கூட சொல்லவில்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது என்று மாலை சூடி அற்புதராஜ் கூறினார்.

Tags:

#Tuticorinnews, #tuticorinnewstoday , #dmk #thoothukudicorporation #tneb #govtjob #compensation #tuticorinnewspapertoday , #tuticorinnewspaper, #Tuticorinnewschannel , #Tuticorinnewsupdate, #Tuticorinlatestnews, #Tuticorinnews , #Tuticorinnewstodaylive , #Tuticorinlatestnews, #latestnewsintuticorin ,#thegreatindianews , #Tginews , #news #Tamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #neyvelinewstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்தூத்துக்குடி , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltuticorin , #todaynewstuticorin #tamilnadu , #தூத்துக்குடிசெய்திகள்
Comments & Conversations - 0