• முகப்பு
  • district
  • செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.

செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெறுவதை முன்னிட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி வாகனங்களில் ஒட்டப்பட்டிருந்த செஸ் போட்டி குறித்த ஒட்டு வில்லைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.07.2022) பார்வையிட்டார்கள். 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதுவரை இந்தியாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளிலேயே மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இந்த ஒலிம்பியாட் போட்டியில் உலகின் முதல் நிலை கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 188 நாடுகளை சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஒவ்வொரு நாளும் மக்களுக்கு தெரியும் வண்ணம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த விழிப்புணர்வு பணிகள் அனைத்து துறை அலுவலர்களும் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளம்பர பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று (18.07.2022) பெரம்பலூர் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, அரும்பாவூர் சாந்தி நிகேதன் மெட்ரிக் பள்ளி, செட்டிக்குளம் லிட்டில் ப்ளவர் மெட்ரிக் பள்ளி, திருமாந்துறை செயிண்ட் ஆண்ட்ரூஸ் மெட்ரிக் பள்ளி, பாடாலூர் ஸ்ரீ அம்பாள் ஸ் மெட்ரிக் பள்ளி, கீழப்புலியூர் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி, பெரம்பலூர் பனிமலர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் அல்மைட்டி வித்யாலயா மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட 8 தனியார் பள்ளி வாகனங்களில் முதற்கட்டமாக 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விதவிதமான ஒட்டு வில்லைகள் பொதுமக்கள் கண் கவரும் வண்ணம் ஒட்டப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி இலட்சினையை ஏராளமான பொதுமக்கள், செய்தியாளர்கள், கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் குழந்தைகள் ஆர்வமுடன் பார்வையிட்டதோடு, அதனருகில் நின்று தன் புகைப்படம் (Selfie) எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி நா.அங்கையற்கண்ணி, மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் செய்தியாளர் ஜஹாங்கீர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended