• முகப்பு
  • district
  • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு 1.35 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு 1.35 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப. ஸ்ரீ வெங்கடபிரியா, இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று (04.07.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், 02 பயனாளிகளுக்கு தலா ரூ.34,272 மதிப்பீட்டில் பார்வையற்றோருக்கான எலக்ட்ரானிக் ப்ரெய்லி ரீடரினையும், 12 பயனாளிகளுக்கு தலா ரூ.5,560 மதிப்பீட்டில் காதொலி கருவியினையும் என மொத்தம் ரூ.1.35 மதிப்பீட்டில் 14 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப. ஸ்ரீ வெங்கடபிரியா, இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி குணசேகரன். 9 வயது மகள் ரித்திகா - 4 ம் வகுப்பு படித்து வரும் மாணவி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கொடுக்கும் பணத்தை உண்டியலில் சேகரித்து வந்த 2,160 ரூபாயை மதுரையில் உள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்குவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் உண்டியலுடன் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களிடம் வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மனுதாரரிடம் கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மக்களின் மனுக்களின் மீது ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுத்த அதற்கான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும். கோரிக்கைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் அரசு அலுவலர்களை நாடி வந்து பொதுமக்கள் தரும் மனுக்களை உரிய ஆய்வுக்குட்படுத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் நம்பிக்கையினை காப்பாற்றும் வகையில் அரசு அலுவலர்கள் பணியாற்றவேண்டும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடனுதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 235 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி நா.அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, தனித்துணை ஆட்சியர் சமூக (பாதுகாப்புத்திட்டம்) சரவணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவவலர் பொம்மி, உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொணடனர். பெரம்பலூர் செய்தியாளர் ஜஹாங்கீர்.

VIDEOS

RELATED NEWS

Recommended