Author: THE GREAT INDIA NEWS

Category: district

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் மக்களைத் தேடி மருத்துவம், நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்-ரே பொருத்திய வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ். இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.07.2022) கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார். காசநோய் இல்லா தமிழகம் - 2025 என்னும் இலக்கை அடைய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 23 மாவட்டங்களுக்கு ரூ.10.65 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் எக்ஸ்ரே பொருத்திய 23 நடமாடும் வாகனங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் 01.07.2022 அன்று வழங்கப்பட்ட வாகனம் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ். இ.ஆய.. அவர்களால் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. இவ்வாகனம் திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று காசநோய் உள்ளவர்களை கண்டறிய அவர்களுக்கு சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே போன்றவற்றை இலவசமாக மேற்கொண்டு காசநோய் உள்ளதா என்பது கண்டறியப்படும். காசநோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள், மருந்துகள், 500 ரூபாய் உதவித்தொகை மற்றும் தொடர் கண்காணிப்பு சேவை வழங்கப்படுவதோடு, அங்குள்ள மக்களிடையே காசநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்படும். மேலும், நடமாடும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன டிஜிட்டல் எக்ஸ்-ரே கருவி மின்வசதி இல்லாத இடங்களில் கூட ஜெனரேட்டர் உதவியுடன் இயங்க வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாகனத்தின் உட்பகுதி குளிர்சாதன வசதியுடன் கூடிய எக்ஸ்-ரே அறை மற்றும் எடுக்கப்படும் எக்ஸ்ரேக்களை உடனுக்குடன் சரிபார்க்கும் வகையில் கணினி பொருத்தப்பட்ட அறை என இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு முறைகளை ஒளிப்பரப்புவதற்கு வண்ணத்தொலைக்காட்சி திரையும். முகாம்களின் போது மக்கள் வசதிக்காக நிழற்குடையும் இவ்வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 10 எக்ஸ்-ரே எடுக்கும் திறன் உள்ள இவ்வாகனங்களின் மூலம் நடப்பாண்டில் 5 இலட்சம் நபர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் காசநோய் கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது. காசநோயாளிகள் குணமடைய சிகிச்சை காலத்தில் சரியான உணவு மற்றும் ஊட்டச்சத்து அவசியம். காசநோயாளிகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் ஊட்டச்சத்து பெட்டகத்தில் தானியம். திணை மற்றும் பருப்பு வகைகள் ஆகியவை தன்னார்வலர்களால் வழங்கப்படுகிறது. காசநோய் இல்லா தமிழகம் - 2025 என்னும் இலக்கின்படி 2015-ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு 217 காசநோயாளிகள் என்று இருந்த விகிதத்தை 2025-ஆம் ஆண்டிற்குள் 44 காசநோயாளிகளாக குறைக்க வேண்டும். சிறப்பாக செயல்பட்டு, காசநோய் விகிதத்தை 20 விழுக்காடு குறைத்ததற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற திருவண்ணாமலை மாவட்ட காசநோய் துணை இயக்குநர் மற்றும் துறை சார்ந்த பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (காசநோய் மரு.பி.அசோக், நலக்கல்வியாளர் திரு.வி.சேஷாத்திரி, தனியார் பொது ஒருங்கிணைப்பாளர் திரு.எம்.குணசீலன், நுண்கதிர்வீச்சாளர் திரு.எஸ்.சத்தியமூர்த்தி, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் திரு.எம்.கிருஷ்ணமூர்த்தி, முதுநிலை ஆய்வக மேற்பார்வையாளர் திரு.ஆர்.உதயகுமார் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:

#Tiruvannamalainews #Tiruvannamalainewsintamil #Tiruvannamalainewslive #Tiruvannamalainewstoday #Tiruvannamalainewstodaytamil #Tiruvannamalainewspapertoday #இன்றையசெய்திகள்திருவண்ணாமலை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #indrayaseithigaltamilnadu #indrayasithigalTiruvannamalaitamilnadu #todaynewstamilnadu #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Tiruvannamalaitodaynews #Tiruvannamalailatestnews #Tiruvannamalainews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #collector
Comments & Conversations - 0