• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கும்பகோணத்தில் பொதுமக்களுக்கு பயன்தரும் விதமாக சட்டமன்ற அலுவலகத்தில் இ சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

கும்பகோணத்தில் பொதுமக்களுக்கு பயன்தரும் விதமாக சட்டமன்ற அலுவலகத்தில் இ சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

ரமேஷ்

UPDATED: May 10, 2023, 9:58:23 AM

கும்பகோணத்தில் சட்டமன்ற அலுவலகத்தில் பொதுமக்களுக்கு பயன்தரும் விதமாக இ சேவை மையம் தொடங்கப்பட்டது. இந்த இ சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த இ சேவை மையத்தில், சிறுகுறு விவசாய சான்றிதழ், விதவை சான்று, ஜாதி சான்று, பிறப்புச் சான்று, ஆதாா் நகல், ஜாதி, வருமான, ஓய்வூதியச் சான்று, இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் வாரிசு சான்றிதழ் மற்றும் திருமண உதவி திட்டம் பதிவு போன்ற சேவைகளை உட்பட அனைத்து திட்டங்களும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் பதிவு செய்தவுடன் சான்றிதழ் கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி செழியன், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், மாநகராட்சி துணை மேயர் சு.ப தமிழழகன், கோட்டாட்சியர் பூர்ணிமா, வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், ஒன்றிய செயலாளர்கள் சுதாகர், கணேசன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பதிவு செய்த பயனாளிகளுக்கு சான்றுகளை வழங்கினா்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended