Author: THE GREAT INDIA NEWS

Category: sports

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளதையொட்டி இன்று (16.07.2022) பள்ளிக்கல்வி துறை சார்பில் திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பங்குப்பெற்ற சதுரங்க போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசினை வழங்கினார். மாமல்லபுரத்தில் பூஞ்சேரி கிராமத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 28.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் 187 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்ப்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிக்கான தொடக்க விழா மிக பிரம்மாண்டமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 28.07.2022 அன்று நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சிறப்பு ஆய்வு கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஒருங்கிணைந்து, மாவட்டங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, இச்செஸ் போட்டி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து இன்று (16.07.2022) 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 800 மேற்பட்ட பள்ளி மாணவிகள் மற்றும் 17 மாணவ. மேற்பட்ட பெற்றோர்கள் பங்குப்பெற்ற சதுரங்க போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டு, வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் நான்சி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வி.வெற்றிவேல், மாவட்ட முதன்னமை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளா வெங்கடரமனன், திருவண்ணாமலை வட்டாட்சியர் சுருேஷ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (திருவண்ணாமலை) முத்துவேல், சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் வின்.என்.நேரு. சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் என்.மகாதேவன் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை செய்தியாளர் D. தனசேகர்

Tags:

#Tiruvannamalainews #chessolympiad #olympiad2022 #chess #mahabalipuram #olympiad #Tiruvannamalainewsintamil #Tiruvannamalainewslive #Tiruvannamalainewstoday #Tiruvannamalainewstodaytamil #Tiruvannamalainewspapertoday #இன்றையசெய்திகள்திருவண்ணாமலை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #indrayaseithigaltamilnadu #indrayasithigalTiruvannamalaitamilnadu #todaynewstamilnadu #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Tiruvannamalaitodaynews #Tiruvannamalailatestnews #Tiruvannamalainews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday
Comments & Conversations - 0