• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பொதுமக்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருந்து மாவட்ட நிர்வாகம் மக்கள் பணிகளை சிறப்பாக செயல்படுத்தும் மாவட்ட ஆட்சியர்.

பொதுமக்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருந்து மாவட்ட நிர்வாகம் மக்கள் பணிகளை சிறப்பாக செயல்படுத்தும் மாவட்ட ஆட்சியர்.

முத்தையா

UPDATED: May 22, 2023, 9:19:35 AM

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை, மாவட்ட புதிய ஆட்சியராக, மருத்துவர். . எஸ். உமா, பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருக்கு அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள், தன்னார்வ, தொண்டு நிறுவனத்தினர், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். 

மாவட்டத்தின் 16-வது ஆட்சித் தலைவராக இவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தமது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். எஸ் உமா, மாவட்ட வளர்ச்சிப் பணிகளை அரசு அலுவலர்களுடன் இணைந்து செவ்வனே மேற்கொள்ளும் குறிக்கோளுடன், அரசுகளின் நலத்திட்டங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும்.

கொல்லிமலை உள்பட மக்களின் பிரச்சனைகள் வட்டார அளவில் அந்தந்த பகுதிகளில் வளர்ச்சியை இலக்காக கொண்டு பொது மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருந்து மாவட்ட நிர்வாகம் பணிகளை மேற்கொள்ளும். 

பெண்கள் நலமே குடும்ப நலம் என்பதால் ஆரோக்கியமான குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்தும் சுகாதாரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே அதற்கு முக்கியத்துவம் அளித்து சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளீட்ட அரசு துறைகளின் சார்பில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

மலைவாழ் பகுதியில் தலசீமியா போன்ற மரபணு சார்ந்த பிரச்னைகள் உள்ளனவா என்பதை கண்டறிந்து அதனை தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும். தாய்-சேய் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் ஒத்துழைப்போடும் சுகாதாரத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும்.

மேலும் அனைத்து மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு முன்னோடி மாவட்டமாக திகழ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் புதிய நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி டாக்டர் எஸ். உமா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

நாமக்கல் மாவட்டத்திற்கு இன்று புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். உமா, 2019-ம் ஆண்டு, அரசின் தேர்வு நிலை முதல் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர், தேசிய நல்வாழ்வு குழும இணை இயக்குனர், திருவள்ளூர், பழனி, இராணிப்பேட்டை மாவட்டங்களில் உதவி/சார் ஆட்சியர், தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் திட்ட இயக்குனர், அரசுகளின் காப்பீடு திட்டங்கள், அவசர ஊர்தி, உலக வங்கி, ஜப்பான் நிதி உதவி திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் திட்ட இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

VIDEOS

RELATED NEWS

Recommended