• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நெல்லிகுப்பம் நகர பகுதிகளில் தரமற்ற சாலைகள் போடப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து ஆணையர் நேரில் ஆய்வு.

நெல்லிகுப்பம் நகர பகுதிகளில் தரமற்ற சாலைகள் போடப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து ஆணையர் நேரில் ஆய்வு.

குமரவேல்

UPDATED: Sep 27, 2023, 12:59:02 PM

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூபாய் 13 கோடி செலவில் சிமெண்ட் மற்றும் தார் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சிமெண்ட் சாலைகள் அமைத்து சில நாட்கள் ஆன நிலையில் மேற்படி சாலைகளில் இருந்து புழுதி பரப்பதாகவும் இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் மீது மண் புழுதி மற்றும் தூசு பரப்பதால் கண் எரிச்சல் சரும நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

அதனைத் தொடர்ந்து நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையர் கிருஷ்ணராஜன் தலைமையில் பொறியாளர் உள்ளிட்ட அலுவலர்கள் நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் ஒப்பந்ததார்களால் அமைக்கபடும் தார் மற்றும் சிமெண்ட் சாலைகளை தோண்டி உரிய அளவுகள் மற்றும் தரமானதாகவும் சாலைகள் அமைக்க படுகிறதா என ஆய்வு செய்யதனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended