• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • இருளர் சாதிச் சான்றிதழ்களை வேண்டி விண்ணப்பித்த மாணவிகளுக்கு ஜாதி சான்றிதழை ஆட்சியர் வழங்கினார்.

இருளர் சாதிச் சான்றிதழ்களை வேண்டி விண்ணப்பித்த மாணவிகளுக்கு ஜாதி சான்றிதழை ஆட்சியர் வழங்கினார்.

மேஷாக்

UPDATED: May 20, 2023, 10:25:20 AM

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கல்லூரியில் சேர்ந்திடும் பொருட்டு, இணையதளத்தின் வாயிலாக, சாதிச்சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்த வானூர் வட்டம், தென்கொடிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மாணவிகள் சாருமதி மற்றும் சரண்யா ஆகியோருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி பழங்குடியினருக்கான இருளர் சாதிச் சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் இணையதளம் வாயிலாக 10,515 சாதிச்சான்றிதழ் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 8,865 நபர்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் வழங்க அனுமதிக்க ப்பட்டுள்ளது.

11,428 வருமானச் சான்றி தழ் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 9,714 நபர்களுக்கு வருமானச்சான்றிதழ் வழங்க அனுமதிக்க ப்பட்டுள்ளது. 9,795 இருப்பிடச் சான்றிதழ் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 8,685 நபர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்க அனுமதிக்க ப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள விண்ணப்ப தாரரின் மனுக்கள் உரிய விசாரணைக்கு பின்னர் ஒருவார காலத்திற்குள் வழங்கபடவுள்ளது.

அதனடிப்படையில், வானூர் வட்டம், தென்கொடிப்பாக்கம் கிராமத்தினைச் சேர்ந்த வீரப்பன் மகள்களான சாருமதி மற்றும் சரண்யா கல்லூரி மேற்படிப்பிற்காக சாதிச்சான்றிதழ் வேண்டி இணையதளம் வாயிலாக விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களின் விண்ணப்பங்கள் உரிய பரிசீலனைக்கு பிறகு இரு மாணவிகளுக்கு பழங்குடியினருக்கான இருளர் சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்

பரமேஸ்வரி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended