• முகப்பு
  • விளையாட்டு
  • நாகையில் 15 நாட்கள் நடைபெற்ற கோடைக்கால பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற 201 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர்  வழங்கினார்.

நாகையில் 15 நாட்கள் நடைபெற்ற கோடைக்கால பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற 201 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர்  வழங்கினார்.

செ.சீனிவாசன்

UPDATED: May 15, 2023, 10:53:30 AM

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. 

மாவட்ட விளையாட்டரங்கில் கடந்த மே 1ம் தேதி முதல் 15 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற முகாமில் 16 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கையுந்துபந்து மற்றும் வளைகோல்பந்து உள்ளிட்ட போட்டிகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

விளையாட்டுக்களுக்கு சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு 15 நாட்கள் அளிக்கப்பட்ட‌ பயிற்சி முகாமின் நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ், தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் பயிற்சி பெற்ற 132 மாணவர்கள் மற்றும் 69 மாணவியர்கள் என மொத்தம் 201 பேருக்கு ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்களை‌ வழங்கினார். 

இந்நிகழ்வில் பெற்ற மாணவர்கள், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்‌ அலுவலர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended