• முகப்பு
  • pondichery
  • பிளாஸ்டிக்கை முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ள நிலையில் சிலர் திருட்டுத்தனமாக விற்பனை செய்வதும் பயன்படுத்துவதுமாக உள்ளனர் என்று முதலமைச்சர்.

பிளாஸ்டிக்கை முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ள நிலையில் சிலர் திருட்டுத்தனமாக விற்பனை செய்வதும் பயன்படுத்துவதுமாக உள்ளனர் என்று முதலமைச்சர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரி அரசு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக சுற்றுச் சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது. கம்பன் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த வினாடி-வினா கவிதைகள், கட்டுரை, போட்டிகளில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் துணிப்பையை பயன்படுத்துவோம் என்ற வகையில் முதலமைச்சர் ரங்கசாமி துணிப்பையை அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர வாகனத்தையும் முதலமைச்சர் ரங்கசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி.. பூமியை நாம் பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்காக சுற்றுப்புற சூழலையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார். புதுச்சேரியில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக தடை செய்யப்பட்ட நிலையிலும் சிலர் திருட்டுத்தனமாக அதனை விற்பனை செய்கிறார்கள் பயன்படுத்துகிறார்கள் என்று அதிருப்தி தெரிவித்த முதலமைச்சர், மக்காத குப்பைகளினால் நீர் பூமிக்குள் இறங்காமல் வீணாக கடலில் கலக்கிறது என்றார். நிலத்தடி நீரை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி உள்ளதாகவும், இதனால் தற்போது நிலத்தடி நீர் மேம்படுத்தப்படுகிறது என்றும் புதுச்சேரி நகர பகுதிக்கு குடிநீர் கொண்டு வருவதற்காக சுமார் 500 கோடி ரூபாயில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார். நிலத்தடி நீரை மேம்படுத்த நல்ல காற்று வசதி இருக்கவேண்டும், மழைநீரை சேமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரியில் வாகனங்கள் அதிக அளவில் உள்ளதால் தினமும் காற்று மாசுபடுகிறது எனவே முறையாக வாகனங்களை பராமரிக்க வேண்டும் என்றார். அரசு கட்டிடங்களில் மழைநீர் சேமிக்கும் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் நீரை குறைவாக பயன்படுத்தும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு புதுச்சேரியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். நல்ல பூமியை வருங்கால சந்ததிக்கு விட்டு விட்டு செல்வோம் என்பதுதான் இந்த அரசின் எண்ணம் என்று கூறிய ரங்கசாமி புதுச்சேரி இயற்கையாகவே ஒரு அழகான மாநிலம் ஒரு சிறிய மாநிலம் இங்கே இயற்கை வளர்ச்சி அழகாக உள்ளது, சதுப்புநில காடுகள் உள்ளது, இயற்கை வளம் மிகுந்த புதுச்சேரி சுத்தமான, சுகாதாரமான, புதுமையான, புதுச்சேரியாக இருக்க வேண்டும் என்றால் அரசு சொல்வதை பொதுமக்கள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, சுற்றுச்சூழல் துறை இயக்குனர் ரமேஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மாணவ மாணவிகள் பொதுமக்கள் என கலந்து கொண்டனர், விழாவில் தொடர்ந்து பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended