• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பொன்னேரி அடுத்த அரசூர் பகுதியில் 110/33-11 துணை மின் நிலையம் 19 கோடியே 25 லட்சம் மதிப்பில் காணொளியில் முதல்வர் திறந்து வைத்தார்.

பொன்னேரி அடுத்த அரசூர் பகுதியில் 110/33-11 துணை மின் நிலையம் 19 கோடியே 25 லட்சம் மதிப்பில் காணொளியில் முதல்வர் திறந்து வைத்தார்.

L.குமார்

UPDATED: May 19, 2023, 7:35:50 PM

தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் தமிழக முதல்வரால் பொன்னேரி அடுத்த அரசூர் பகுதியில் 110/33-11 துணை மின் நிலையம் 19 கோடியே 25 லட்சம் மதிப்பில் காணொளியில் திறந்து வைத்ததை முன்னிட்டு பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் தலைமையில் துணை மின் நிலையத்தில் குத்து விளக்குயேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரபட்டன.

இதன் மூலம் அரசூர் ஐயநல்லூர், காட்டாவூர், விடதண்டலம்,, கோளூர், பழவேற்காடு, அண்ணாமலை சேரி உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைவதாக அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதில் சேர்மன் ரவி மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகர் உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் உதவி பொறியாளர் சரண்ராஜ் மேலூர் பிரேம் சுகனேஷ் ஒன்றிய கவுன்சிலர் வெற்றி அரசூர் தலைவர் ஏழுமலை துணைத் தலைவர் பாஸ்கர் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended