Author: THE GREAT INDIA NEWS

Category: pondichery

புதுச்சேரிக்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள மத்திய இணைய அமைச்சர் எல். முருகன் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடி வருகிறார். இன்று தொழில் முனைவோர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு புதுச்சேரி தனியார் உணவகத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 150 க்கு மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன்.... கடந்த 8 ஆண்டுகளில் மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக ஆட்சியை கொடுத்து வருகிறது.இதில் எண்ணற்ற சாதனைகள் செய்துள்ளோம். 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் 2047 ஆம் ஆண்டு நூறாவது சுதந்திர ஆண்டு. அப்போது வளர்ச்சி மிக்க நாடாக இந்தியா இருக்கும் என்ற அவர் இதன் மூலம் அனைவருக்கும் வீடு அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்கும் என்றும் இதற்கான திட்டங்களையும் மத்திய அரசு முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார். புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்க பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளில் புதுச்சேரிக்கு 3000 கோடி ரூபாய் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ரயில்வே நிலையத்தை மேம்படுத்த 90 கோடி ரூபாயும், ஆயிஷ்மான் திட்டத்திற்கு 30 கோடி ரூபாயும், கிராமப்புற வளர்ச்சி மேம்பாட்டுக்கு 50 கோடி ரூபாயும், ஜிப்மர் வளர்ச்சிக்கு 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்டியலிட்டார். மேலும் விவசாயிகளுக்கு 11 ஆயிரம் பேருக்கு 21 கோடி ரூபாய் காப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்குவதற்கு 1830 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்த அவர்.. மத்திய உள்துறை அமைச்சர் புதுச்சேரிக்கு வந்த பொழுது 600 கோடி ரூபாயில் திட்டத்தை தொடங்கிவைத்துள்ளார் என்றும் குறிப்பிட்டார். அதன்படி புதுச்சேரியில் நகர பகுதியில் வணம் உருவாக்குதல், பூங்கா உருவாக்குதல், பெரிய வாய்க்கால் தூர்வாரப்படுதல், காரைக்கால் துறைமுகம் மேம்படுத்தப்படுதல், உள்ளிட்ட திட்டங்களையும் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். ஏழைகள் நலனில் அக்கறை செலுத்தி குரல் கொடுக்கும் அரசாக மத்திய அரசு இருந்து வருகிறது என்றும், புதுவை வளர்ச்சியே தேசிய ஜனநாயக கூட்டணியின் வளர்ச்சி என்று குறிப்பிட்டார். பேட்டி; எல். முருகன் மத்திய இணை அமைச்சர். பாண்டிச்சேரி நிருபர் சக்திவேல்.

Tags:

#pondicherynewstoday #pondicherynewstamil #pondicherynewspapertoday #bestpondichery #lmurugan #murugan #bjp #centralminister #pondicherynewslivetoday #pondicherynews #இன்றையசெய்திகள்புதுச்சேரி #இன்றையசெய்திகள்புதுச்சேரிதமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடுமாவட்டங்கள் #indrayaseithigalpondichery #todaynewspondichery #todaynewstamilnadu #todaytamilnadunews #indrayaseithigalpondicherytamilnadu #indrayaseithigaltamilnadumavattangal #TheGreatIndiaNews #Tginews #news
Comments & Conversations - 0