Author: மாமுஜெயக்குமார்

Category: மாவட்டச் செய்தி

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் அரியனேந்தல் கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் பரமக்குடி, நயினார் கோவில், போகலூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட 102 ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் எஸ்.வி.மஹாலில் நடந்தது.

கூட்டத்திற்கு, ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி, ஊராட்சி மன்ற தலைவர்கள் குடிநீர் திட்ட பணிகளுக்கான திட்டமிடுதல் குறித்து கருத்துக்கள் வழங்கி பேசியதாவது :

பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான தண்ணீர் தேவையை நிறைவேற்றுவது ஒவ்வொருவரின் கடமையாகும். அந்த வகையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதியளவு தண்ணீர் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து வழங்க இயலாத சூழ்நிலை தற்பொழுது உள்ளது. அதை மாற்றி அனைத்து பகுதிகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தண்ணீர் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கூட்டத்தின் நோக்கம் ஊராட்சி மன்றத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களுடன் கலந்து ஆலோசித்து காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் அனைத்து பகுதி மக்களுக்கும் முழுமையான அளவு தண்ணீர் கிடைத்திட தேவையான திட்டங்களை வடிவமைக்க வேண்டும்.

தற்பொழுது ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 20 -க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு இதற்குண்டான பதில்கள் பூர்த்தி செய்து வட்டார வளர்ச்சி அலுவலங்களில் வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இப்படிவத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் பொதுமக்களுக்கு எந்த மாதிரியாக தண்ணீர் வழங்கப்படுகிறது. அதாவது ஆழ்துளை கிணறு, திறந்த வெளி கிணறு, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் என ஏதேனும் ஒரு வகையில் தண்ணீர் வழங்கப்படுவதை விவரம் தெரிவிக்க வேண்டும்.காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் எந்தெந்த ஊர்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.

இவ்வளவு நாளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது என்றும், வழங்காத ஊர்கள் குறித்த விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அதேபோல், எவ்வளவு தண்ணீர் தேவை என்பதையும் அளவு குறித்த விவரத்தையே இந்த படிவத்தில் பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக, பொதுமக்களோடு ஆலோசித்து படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்த படிவம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து சென்னையில் உள்ள நீர்வள ஆதார மையத்திற்கு சென்று அங்கிருந்து விஞ்ஞானிகள், பொறியாளர்கள் கொண்ட குழு மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து கள ஆய்வு மேற்கொள்வார்கள்.

அந்த ஆய்வின் போது ஊராட்சி மன்றத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து திட்டப் பணிகளை மேற்கொள்ள உறுதுணையாக இருக்க வேண்டும்.

இந்த மாதிரியான விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றிய ஒன்றிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பணிகளை 2024 ஆம் ஆண்டிற்குள் முடித்திட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு திட்டமிட்டு குடிநீர் திட்டபணிகள் மேற்கொள்ளும் பொழுது அனைத்து பகுதிகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 2054 - ஆம் ஆண்டு வரை பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் வழங்கிடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே தற்பொழுது உள்ள நிலையை சரியாக மதிப்பிட்டு படிவத்தை பூர்த்தி செய்து வருங்கால சந்ததியினருக்கு தடையின்றி குடி தண்ணீர் கிடைத்திட உறுதுணையாக இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.

ஆய்வு கூட்டத்தில், பரமக்குடி சார் ஆட்சியர் அப்சல் ரசூல், பயிற்சி உதவி ஆட்சியர் வி.எஸ்.நாராயண சர்மா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர் சண்முகநாதன், பரமக்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், போகலூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சத்யா குணசேகரன், துணைத்தலைவர் பூமிநாதன், சென்னை நீர்வள ஆதாரத்துறை பொறியாளர் சரவணன்,

ஊராட்சிகள் உதவி இயக்குநர் பரமசிவம், பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரமோகன், கருப்பையா, நயினார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோட்டைராஜ், மலைராஜன், போகலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், சிவசாமி, செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:

#Ramanathapuramnews, #Ramanathapuramnewstoday , #Ramanathapuramnewspapertoday , #Ramanathapuramnewspaper, #Ramanathapuramnewschannel , #Ramanathapuramnewsupdate, #Ramanathapuramlatestnews, #Ramanathapuramnews , #Ramanathapuramnewstodaylive , #Ramanathapuramlatestnews, #latestnewsinRamanathapuram ,#TheGreatIndiaNews , #Tginews , #newstamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #Ramanathapuramnewstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்ராமநாதபுரம் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalramanathapuram , #todaynewsramanathapuramtamilnadu , #ராமநாதபுரம்செய்திகள்
Comments & Conversations - 0