• முகப்பு
  • other
  • காலண்டர் என்பது ஒவ்வொரு நாளையும் நினைவு படுத்தும் நாள் காட்டி ஆகும். இந்த காலண்டர் உருவான வரலாறு பற்றி இப்போது பார்க்கலாம்.

காலண்டர் என்பது ஒவ்வொரு நாளையும் நினைவு படுத்தும் நாள் காட்டி ஆகும். இந்த காலண்டர் உருவான வரலாறு பற்றி இப்போது பார்க்கலாம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காலண்டே என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து உருவானது தான் காலண்டர். இதற்கு அர்த்தம் கணக்கு கூட்டுவது என்றுபொருள். புவியியல் மற்றும் கால நிலைகளுக்கு ஏற்படும் மாற்றங்கள் தான் துவக்க காலத்தில் காலண்டர்களுகு அடிப்படையாக அமைந்தது. நதிகளில் ஆண்டு தோறும் ஏற்படும் வெள்ளப் பெருக்கை அடிப்படையாகக் கொண்டு தான் பிரதான எகிப்தியர் உருவாக்கிய காலண்டர் இதற்கு ஒரு சான்றாக உள்ளது. இன்றுநாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் காலண்டரின் அடிப்படை கி.மு. 45 ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியன் காலண்டர். இன்றைக்கு உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்படுகின்ற காலண்டர் கிரி கோரியன் காலண்டர். பதி மூன்றாம் போப் ஆண்டவராக இருந்த போப் கிரிகோரி ஆணைப்படி அலோசியாஸ் என்ற மருத்துவர் தான் 1582 பிப்ரவரி 24 இல் ஜூலியன் காலண்டரில் காணப்பட்ட குறைகளை திருத்தி அமைத்து கிரிகோரியன் காலண்டரை உருவாக்கினார். இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை அடிப்படையாக கொண்டு இந்தகாலண்டரில் வருடங்கள் ஒழுங்கமைக்கப் பட்டுள்ளது. ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி இது போன்று பெரும்பாலான பகுதிகள் கிரிகோரியன் காலண்டரை முதல்முதலாக ஏற்றுக் கொண்டது. 1582 இல் அக்டோபரிலிருந்து கிரிகோரியன் காலண்டர் பயன் படுத்தப்பட்டது. இங்கிலாந்தும், அமெரிக்காவும் 1752 பின்னர் தான் கிரிகோரியன் காலண்டரை அங்கீகரித்தன. 1923 பிப்ரவரி 15 இல் கிரிகோரியன் காலண்டரை அங்கீகரித்த கிரீஸ் இந்த பட்டியல் நாடுகளின் கடைசி நாடு ஆகும். இந்திய தேசியக்காலண்டர் எடுத்துக் கொண்டால், கி.பி 75 இல் தொடங்கும் சககாலண்டர் தான் இந்தியாவின் தேசிய காலண்டராக கருதப்படுகின்றது. சாதவாகன மன்னரால் சாலி வாகனன் மன்னன் விக்கிரமாதித்தனை போரில் வென்று தொடர்ந்து சகவருடம் தொடங்கியது. இந்தியாவில் கிரிகோரியன் காலண்டரும், சகவருட காலண்டரும் அதிகாரபூர்வமாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. 1957 இல் காலண்டர் மறு சீரமைப்பு கமிட்டிதான் சககாலண்டரை அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்க பரிந்துரை செய்தது. கிரிகோரியன் காலண்டரின் 1957 மார்ச் 2 ஆம்தேதி தான் சகவருடத்தின் முதல்மாதமான சைதிரம் . 1 . 1879 இல் அதிகாரப் பூர்வமாக தொடங்கியது. தமிழ் காலண்டர் சூரியனை அடிப்படையாககொண்டு உருவாக்கப் பட்டது. கிரிகோரியன்போன்றே சித்திரைமுதல் பங்குனிவரையிலான 12 மாதங்கள் இதில்இருக்கிறது. முகம்மதுநபி  மெக்காவிலிருந்து மதினாவுக்கு சென்றநாளிலிருந்து தான் இஸ்லாமிய காலண்டரின் வருடம் தொடர்ந்தது. கி.பி . 622 . இல் நிகழ்ந்தது நபிகளின் பயணம். சந்திரனை அடிப்படையாக கொண்ட இது 12 மாதங்கள் கொண்டது. ஜூலியன் காலண்டர் கி மு . 45 தேதிபிரபல வானியல்நிபுணராக இருந்த கோசி ஜின்சி என்பவரின் அறிவுரைப் படி இந்த காலண்டரை நடைமுறைப் படுத்தியவர் ஜூலியஸ்சீசர். தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டுவரும் கிரிகோரியன் காலண்டரின் முன்னோடி இது தான். ஜூலியன் காலண்டரின்படி ஒரு வருடத்திற்கு 365 நாட்களாகும். செய்தியாளர்: பா. கணேசன்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended