• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ஆத்தூர் காமராஜர் அணையின் நீரேற்று நிலையத்தில், தற்காலிக அலுவலராக பணிபுரிந்தவர் சாலையோரத்தில் சடலமாக மீட்பு.

ஆத்தூர் காமராஜர் அணையின் நீரேற்று நிலையத்தில், தற்காலிக அலுவலராக பணிபுரிந்தவர் சாலையோரத்தில் சடலமாக மீட்பு.

கோபிநாத்

UPDATED: Mar 31, 2023, 1:45:08 PM

திண்டுக்கல் அருகே உள்ள நல்லாம்பட்டியை சேர்ந்தவர் ரங்கராஜன் (வயது 45). இவர், செம்பட்டி அருகே உள்ள ஆத்தூர் காமராஜர் அணையின் நீரேற்று நிலையத்தில், தற்காலிக அலுவலராக பணிபுரிந்து வந்தார்.

அணைக்கு சென்ற இவர், நேற்று மதியம் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய மனைவி, ரங்கராஜனின் செல்போனில் தொடர்பு கொண்டார்.

ஆனால் செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தனர். 

இதனால் அவரை தேடி ரங்கராஜனின் மனைவி அணைக்கு வந்தார். ஆனால் அங்கு அவர் இல்லை. இந்தநிலையில் கோழிப்பண்ணை பிரிவில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையோரத்தில் ரங்கராஜன் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது உடலில் சிராய்ப்பு காயங்கள் இருந்தன, இதனால் அவரது சாவில் மர்மம் இருப்பதாக போலீசார் கருதுகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு தான், ரங்கராஜன் சாவுக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended