Author: THE GREAT INDIA NEWS

Category: political

கும்பகோணத்தில் பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மேடைகளில் சரமாரியாக பலரையும் விமர்சிப்பார்.. யாருக்கும் பயப்படவே மாட்டார். சமீப காலமாகவே, மத்திய அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனையும் நாஞ்சில் விமர்சித்து வந்தார். அதுவும் பொதுக்கூட்டங்களில், இந்த தலைவர்களை ஒருமையில் தரக்குறைவாக பேசி வந்ததாக பாஜகவினர், இவர்மீது கடுமையான கொந்தளிப்பில் இருந்தனர். தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்து தனியார் ஓட்டலில் தங்கியிருந்த நாஞ்சில் சம்பத், இந்த விஷயம் கேள்விப்பட்டு, நாஞ்சில் சம்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக மாவட்டத் தலைவர் சதீஷ் தலைமையில் ஏராளமான பாஜகவினர் குவிந்து முற்றுகையிட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். தொடர்ந்து பாஜகவினர் நாஞ்சில் சம்பத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி முழக்கமிட்டனர்.

Tags:

#இன்றையசெய்திகள்கும்பகோணம் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #kumbakonamnewstodaytamil #kumbakonamflashnewstamil #aanmeegam #anmegam #anmigam #spiritual #devotional #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #nanjilsambathspeaker #nanjilsambath #bjp #BJPCONDEMNATION #police #nanjilsampath
Comments & Conversations - 0