• முகப்பு
  • அரசியல்
  • நாகப்பட்டினம் கிறிஸ்தவ மத போதனை செய்பவரின் வீட்டை பாரதிய ஜனதா கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு.

நாகப்பட்டினம் கிறிஸ்தவ மத போதனை செய்பவரின் வீட்டை பாரதிய ஜனதா கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு.

செ.சீனிவாசன்

UPDATED: May 11, 2023, 7:29:58 PM

நாகை மறைமலைநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் எம்.ஆனந்தன் (55). முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது நாகப்பட்டினம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இரவு வாட்ச்மேன் ஆக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி மகிழரசி இவர் கீச்சாம்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவர்களது மகன் அரவிந்தன் எம்இ படித்து வருகிறார். ஆனந்தன் வசித்து வரும் மறைமலை நகர் குடியிருப்புகளுக்கு மத்தியில் தன் வீட்டில் , வெங்கடேசன் என்ற பாஸ்டரை வைத்துக்கொண்டு கிறிஸ்தவ மத போதனை செய்து வருகிறார் என்றும் இரவு பகலாக கூச்சலிட்டு அருகாமையில் உள்ள வீடுகளை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது .

மேலும் மற்ற மதத்தினரை அவர் மதம் மாற்றுவதாகவும் கூறப்படுகிறது, இந்து கோவிலுக்கு அருகேயும், இந்து ஜனங்கள் அதிகம் அருகில் இருக்கிறபோது அவர்களை தொந்தரவு செய்யும் விதமாக கடந்த ஆறுமாதமாக ஆனந்தன் தனது வீட்டில் ஜெபக்கூட்டம் நடத்தி வந்திருக்கிறார்.

இது குறித்து தகவலறிந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி செழியன் தலைமையில் வந்த பாஜகவினர் ஆனந்தனின் வீட்டில் நடைபெற்ற ஜெப கூட்டத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் தகவலறிந்த வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் வந்த போலீஸார் பாஜகவினரை சமாதானப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஆனந்தன் போலீஸாரிடம் இனி கிறிஸ்தவ மத போதனை செய்ய மாட்டேன் என உறுதிமொழி அளித்ததின் பேரில் பாஜகவினர் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.

இதனால் மறைமலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

VIDEOS

RELATED NEWS

Recommended