• முகப்பு
  • district
  • பொறுப்பேற்ற மூன்று மாதத்திற்குள் காவல் நிலையத்தை அழகுபடுத்தி நவீனமாக்கிய உதவி காவல் கண்காணிப்பாளர்.

பொறுப்பேற்ற மூன்று மாதத்திற்குள் காவல் நிலையத்தை அழகுபடுத்தி நவீனமாக்கிய உதவி காவல் கண்காணிப்பாளர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க 14 காவல் நிலையங்களும் இரண்டு மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. காஞ்சிபுரம் அடுத்துள்ள பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் கடந்த மூன்று மாதத்திற்கு முன் உதவி காவல் கண்காணிப்பாளராக அஜ்மான் ஜமால் என்ற பயிற்சி பெண் IPS அவர்கள் நியமிக்கப்பட்டார். பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் தேங்கிக்கிடந்த மோட்டார் சைக்கிள்கள் , மணல் மற்றும் சாராய கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் கேட்பாரற்று ஒழுங்கீனமாக கிடந்தது. அவற்றை சட்டப்படி உரியவர்களிடம் ஒப்படைத்து பயன்படாத வாகனங்களை அங்கிருந்து அகற்ற அவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து முயற்சி மேற்கொண்டார். அதேபோல் காவல் நிலையத்தில் தேங்கிக் கிடந்த பல கோப்புகளையும் ஆவணங்களையும் கணணியில் பதிவேற்றி அப்டேட் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். காவல்நிலையத்துக்கு வருகின்ற புகார்தாரர்களை அமர வைக்க வரவேற்பு அறை அமைத்து அவர்களின் புகார்களை கனிவுடன் பரிசீலனை செய்ய ஏற்பாடு செய்துள்ளார். காவல் நிலையத்தின் அனைத்து இடங்களையும் சுத்தப்படுத்தி மெருகேற்றி புத்தம் புது கட்டடம் போல பளிச்சென வைத்துக்கொண்டார். சட்டம் ஒழுங்கு போன்ற பிரச்சனைகளை தீர விசாரித்து உடனடியாக தீர்வு காண ஏற்பாடு செய்தார். இது போன்ற பல நல்ல செயல்களை பொறுப்பேற்ற மூன்று மாதத்திற்குள் கடமை, கண்ணியம் , கட்டுப்பாடு என்ற சொல்லுக்கு ஏற்ப காவல் நிலையத்தை மெருகேற்றிய உதவி காவல் கண்காணிப்பாளர் அஜ்மான் ஜமால் அவர்களுக்கு இந்திய தர கவுன்சிலின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான பணியிட மதிப்பீடு (வாஷ்) பாராட்டு சான்றிதழ் கிடைத்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் அவர்கள் அதை வழங்கி அஜ்மான் ஜமால் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் , உதவி காவல் ஆய்வாளர் நித்தியானந்தம் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் அவர்கள் பாராட்டு தெரிவித்தார். முசரவாக்கம், கீழ்கதிர்பூர், முத்துவேடு, பிச்சுவாடி, பெரும்பாக்கம், கீழம்பி போன்ற பகுதிகளில் நடைபெறும் மணல் கடத்தலையும் தடுக்க வேண்டும் என சமூக அவர்களை வேண்டுகோள் வைக்கின்றனர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்

VIDEOS

RELATED NEWS

Recommended