• முகப்பு
  • குற்றம்
  • தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர், செய்தியாளர்களை ஒருமையில் பேசி தரக்குறைவாக இருக்கும் நிலை.

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர், செய்தியாளர்களை ஒருமையில் பேசி தரக்குறைவாக இருக்கும் நிலை.

மாரிமுத்து

UPDATED: May 8, 2023, 10:00:17 AM

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் முத்துகிருஷ்ணன் திங்கட்கிழமை மதியம் அண்ணா நகரில் சபரி தென்றல் என்ற சீட்டு கம்பெனியில் பணம் கொடுக்கல் ஏற்பட்ட தகராறில் நிவிதாவின் கணவர் பியோ தாக்கப்பட்டு மண்டை உடைக்கப்பட்டு காயத்துடன் இருந்தார.

அப்பொழுது செய்தியாளர்கள் சபரி தென்றல் சீட்டு கம்பெனியை படம் எடுக்க செய்தியாளர்கள், வீடியோகிராபர்கள் சென்ற போது  அங்கு இருந்த மத்திய பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் செய்தியாளரை பார்த்து வெளியே போ உள்ளே வரக்கூடாது, மேலும் சில தகாத வார்த்தைகளால் செய்தியாளர்களை பேசினார்.

இதனால் அங்கு இருந்த செய்தியாளர்களுக்கும் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை அடுத்து செய்தியாளர்களை  மிகவும் தரம் குறைந்து தரக்குறைவான வார்த்தைகளால் பேசிய உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று செய்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

ஒழுக்கத்திற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய காவல்துறையே இதுபோன்ற செயல்படுவது எந்த விதத்தில் நியாயம்.

கடமை கண்ணியம் கட்டுப்பாடு இது ஏட்டில் மட்டும்தான் செயலில் கிடையாதா ? மற்றவர்களை திட்டுவதற்கும் அடிப்பதற்கும் யார் அதிகாரம் கொடுத்தது.

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக மட்டுமே தான் காவல்துறை, எல்லோரையும் ஏளனமாக பேசுவதற்கோ அல்லது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கோ அல்ல.

புகார் கொடுக்க வருபவர்களோ அல்லது பொதுமக்களையோ மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று இவர்களுக்கு முதலில்  பாடம் எடுக்க வேண்டும்.

இவர்கள் எல்லோரையும் கண்காணிக்கும் காவல் கண்காணிப்பாளர் இவர்கள் எல்லோரையும் கண்காணிக்க வேண்டும்.

அப்போது தான் காவல்துறையிலிருந்து பொது மக்களுக்கு உண்டான மரியாதை கிடைக்கும்.

இதே போன்ற ஒரு சாமானியன் மதிப்பு குறைவாக காவல்துறையை பேசிவிட்டால் அவர்களை என்ன செய்வீர்கள் ?

மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended