• முகப்பு
  • district
  • கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் வட்டார அளவிலான சுகாதார திருவிழா.

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் வட்டார அளவிலான சுகாதார திருவிழா.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் வட்டார அளவிலான சுகாதார திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் , திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் முன்னிலையில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் சீரிய திட்டங்களான இல்லம் தேடி கல்வி திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் மக்களினை நேரடியாக சென்றடைக்கின்ற திட்டங்களாகவே அமைந்துள்ளது. குறிப்பாக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் தோல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு மருத்துவம், மன நல மருத்துவம் ஆகியவைகளை, மருத்துவர்களை கொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து, நோயை கண்டறிந்து, தேவைப்படுவோர்க்கு உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வட்டாரத்திலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ முகாம்களில் இரத்தம் (எச்.பி) அளவு, இரத்த அழுத்த பரிசோதனை (30 வயதிற்கு மேற்பட்டோருக்கு) இரத்தத்தில் சர்க்கரையின் அளவு பரிசோதனை (30 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும், 18-29 வயதிற்குரியவர்களுக்கு தேவையிருப்பின்), இரத்தத்தில் கொழுப்பின் அளவீடு பரிசோதனை. மலேரியா இரத்தத்தடவல் பரிசோதனை, இ.சி.ஜி. (இதய துடிப்பவை அளவி இதய மின்துடிப்புப் பதிவு) அல்ட்ராசோனாகிராம் கர்ப்பிணிகள் அனைவருக்கும், கண்புரை ஆய்வு மற்றும் பார்வைக் குறைபாட்டிற்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்குதல், செமி ஆட்டோ அனலைசர் மூலம் பரிசோதனை மற்றும் முக்கிய பரிசோதனைகள், கொரோனா தடுப்பூசி வழங்குதல், குழந்தைகளுக்கு மற்றும் தாய்மார்களுக்கு இதர தடுப்பூசி வழங்குதல், காசநோய் பரிசோதனை, பல் பரிசோதனை, காது, மூக்கு மற்றும் தொண்டை பரிசோதனை, நல்வாழ்விற்கான யோகா மற்றும் தியானம், காணொலி மூலமாக மருத்துவ ஆலோசனை, ஆலோசனை மையம் உள்ளிட்டவைகளும் மேலும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது பொதுமக்களை பல்வேறு நோய்களிலிருந்து தொடக்க நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்துவதாகும். இவ்விழாவில் விழிப்புணர்வு கண்காட்சி அரங்காக அமைக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் பார்வையிட்டு மருத்துவம் சார்ந்த திட்டங்களை அறிந்து பயன்பெறவேண்டும். தற்பொழுது கொரோனா தொற்றானது அதிகரித்து வரும் சூழ்நிலையில் கொரோனா தொற்று தடுப்பூசியினை செலுத்தி கொள்ள வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் மூன்றாவது தவணையான முன்னெச்சரிக்கை தடுப்பூசியினையும் செலுத்தி கொள்ள வேண்டும். குறிப்பாக பொது இடங்களில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியினை பின்பற்றுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார். அதனை தொடர்ந்து, பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 9 பள்ளி மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளும், தேசிய காச நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காசநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் 2 பயனாளிகளுக்கு ஊட்டசத்து உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பும், தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தொழுநோயினால் பாதிக்கப்பட்ட 2 பயனாளிகளுக்கு காலணிகளும், 2 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து உணவுபொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதாரம்) ஹேமசந்த் காந்தி, திருவாரூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் புலிவலம் தேவா, ஒன்றிய துணை பெருந்தலைவர் துரை தியாகராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் தௌத் இக்பால், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருணாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி,பாஸ்கர், ஊராட்சி மன்றத்தலைவர் காளிமுத்து, வட்டார மருத்துவ அலுவலர் குருதேவ் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். திருவாரூர் செய்தியாளர் இளவரசன். இன்றைய செய்திகள் திருவாரூர் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,District news,Thiruvarur news,kalaignar varumun kaapoom thitam

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended