• முகப்பு
  • chennai
  • சென்னை விமான நிலையத்தின் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி வாகன நிறுத்தம், செயல் பாட்டுக்கு வருகிறது.

சென்னை விமான நிலையத்தின் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி வாகன நிறுத்தம், செயல் பாட்டுக்கு வருகிறது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை விமான நிலையத்தின் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி வாகன நிறுத்தம், செயல் பாட்டுக்கு வருகிறது சென்னை விமான நிலையத்தின் முன் பகுதியில், 3.36 லட்சம் சதுர மீட்டரில், 250 கோடி ரூபாய் மதிப்பில், அடுக்குமாடி வாகன நிறுத்தம், வணிக வளாகங்கள் மற்றும்முக்கிய பிரமுகர்களுக்கான ஓய்வு அறைகள் கட்டும் பணி, 2019ல் துவங்கி, தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஆறு அடுக்குகள் உடைய இந்த வளாகத்தின் வாகன நிறுத்தத்தில், 2,100 கார்கள் வரை நிறுத்தலாம். இந்த வாகன நிறுத்தம், விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறது. இது குறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:அடுக்குமாடி வாகன நிறுத்தம் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் பணி முடிந்து, வளாகத்திற்குள் வாகனங்கள் செல்ல சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இந்த அடுக்குமாடி வாகன நிறுத்தம் மற்றும் வணிக வளாக கட்டடத்தின் திறந்த வெளி மேல் தளத்திலும், கூடுதலாக, 400 கார்கள் நிறுத்த சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. கீழ், மேல் என, இரு பிரிவாக கார்களை நிறுத்தலாம். அவற்றுக்கு மேற் கூரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பல அடுக்கு வாகன நிறுத்தம் வசதி, சோதனை அடிப்படையில் விரைவில் செயல் பாட்டுக்கு வரும். அதன்பின், அதிகாரப்பூர்வமாக துவக்கி வைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர். செய்தியாளர் பா. கணேசன்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended