பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

ஜோ.லியோ

UPDATED: May 6, 2023, 10:57:21 PM

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழாவை ஒட்டி நேற்று 6ம் தேதி மாலை 6.00 மணிக்கு அந்தமான் ஆயர் விசுவாசம் செல்வராஜ் கொடி ஏற்றி தொடங்கி வைத்தார்.

திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்தியாவில் உள்ள 10 பசிலிக்காவில் ஒன்றாகவும், தமிழ்நாட்டில் கிருஸ்துவர்கள் வேளாங்கண்ணிக்கு அடுத்ததாக தர்சிக்க விரும்பும் ஆலயமாகவும்,

___________________________________________________

வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும் :-

https://youtu.be/wxMSWfkFKdI

___________________________________________________

ஏசு சுமந்த சிலுவையின் ஒரு சிறு துண்டு இங்கு உள்ளதும் சிறப்பு ஆகும். உள்ளூர், வெளியூர், வெளிநாடு என அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தினமும் ஆயிரக்கணக்கில் வந்து மாதாவை தர்சித்து வருகின்றனர். 

இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆண்டுப்பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். 

அது போல இவ்வாண்டும் நேற்று 6 ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு அந்தமான் ஆயர் விசுவாசம் செல்வராஜ் கொடி ஏற்றி துவக்கி வைத்தார். முன்னதாக மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடியை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து அந்தமான் போர்ட் பிளேயர் மறை மாவட்ட ஆயர் விசுவாசம் செல்வராஜ் , பேராலய அதிபரும், பங்கு தந்தையுமான சாம்சங், துணை அதிபரும், பொருளாளருமான ரூபன் அந்தோணி ராஜ்,

உதவி பங்கு தந்தைகள் அன்புராஜ், தாமஸ், ஆன்மீக பங்கு தந்தைகள் அருளானந்தம், ஜோசப் தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் மற்றும் சுற்றுவட்டார பங்கு தந்தைகளை பேண்டு, வாத்தியங்கள் இசைக்க அழைத்து வரப்பட்டனர். 

ஆயர் விசுவாசம் செல்வராஜ் கொடியை புனிதம் செய்து பக்தர்கள் மரியே வாழ்க, அன்னையே வாழ்க என்ற கோஷங்களுக்கு இடையே வாணவேடிக்கை முழங்க ஏற்றி வைத்தார். 

அதனை தொடர்ந்து “மரியா –ஆறுதலின் அன்னை” என்ற தலைப்பில் மறையுரையாற்றி ஆசி வழங்கினார். 

இன்று முதல் வரும் நாட்கள் நவநாட்களாக கருதப்பட்ட ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலியும் பின் சிறப்பு செபமாலையோடு சிறு தேர்பவனி, நற்கருணை ஆராதனை மற்றும் குணமலிக்கும் நற்செய்தி கூட்டமும் நடக்கிறது.

விழாவில் முக்கிய தினமான மே 14 ஆம் தேதி காலை 6.00 மணிக்கு பூண்டி மாதா பேராலய முன்னாள் பங்குத்தந்தை லூர்து சேவியர் மற்றும் இராயப்பர் ஆகியோரின் நினைவு திருப்பலி நடக்கிறது.

குடந்தை ஆயர் அந்தோனிசாமி மாலை 6.00 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி “மரியா –அருளின் ஊற்று” என்ற தலைப்பில் மறையுரையாற்றி ஆசி வழங்குகிறார். பெஸ்கி கலை தொடர்பகம் வழங்கும் கலை நிகழ்ச்சிகளும், குடந்தை ஜேம்ஸ் பாண்டு குழுவினரின் இன்னிசையும் நடக்கிறது.

இரவு 9.30 மணிக்கு மின் விளக்களாலும், மல்லிகை மலர்களால் அலங்கரிக்கபட்ட ஆடம்பர தேர் பவனியை குடந்தை ஆயர் அந்தோனிசாமி தலைமையில் புனிதம் செய்து துவக்கி வைக்கின்றார்.

15ம் தேதி காலை 6.00 மணிக்கு ஆயர் தலைமையில் திருப்பலி மேற்கொள்கின்றார். மாலை 5.15க்கு திருப்பலி, வேண்டுதல் சப்பரம் மற்றும் கொடியிறக்கமும் நடக்கவுள்ளது.

விழா ஏற்பாடுகளை பேராலய அதிபர் மற்றும் பங்குத்தந்தையுமான சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், உதவி பங்குத்தந்தைகள் ஆன்மிக தந்தைகள், தியான இல்ல இயக்குநர் மற்றும் பங்கு மக்கள் வெகு விமர்சியாக செய்து வருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended