Author: முத்தையா

Category: மாவட்டச் செய்தி

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், எல்லக்கிராய் என்னும் மலைக்கிராமத்தில்,  தமிழ்நாட்டில் முதன்முறையாக மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் ஹீமோகுளோபினோபதி நோய்க் கண்டறியும் பரிசோதனைகள் மற்றும் ரூ.40 கோடி மதிப்பீட்டில் உயிர் காக்கும் உயர் ரக மருந்துகள் வழங்கும் திட்டத்தினை, மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்லாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சர் மருத்துவர். மா. மதிவேந்தன் உடன் இணைந்து  (30.05.2023) தொடங்கி வைத்தார்.

அப்போதும் எல்லக்கிராய் கிராமத்தில் பொதுமக்களுக்கு மலைவாழ் மக்களுக்கு ஹீமோகுளோபினோபதி இரத்தப் பரிசோதனை செய்யும் பணிகளையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இப்பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களை அமைச்சர்கள் மா. சுப்ரமணியன், மா. மதிவேந்தன் ஆகியோர் வழங்கினர். 

இதனைத்தொடர்ந்து இவ்விழாவில் பேசிய மாநில வனத்துறை அமைச்சர் டாக்டர் மா . மதிவேந்தன், தமிழக அரசு மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், எண்ணற்ற பல திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருவதால், குழந்தைகள், வளரி lம் பெண்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான மருத்துவ சேவைகள் தங்கு தடை இன்றி கிடைப்பதாகவும் கூறினார். 

விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழகத்தில் வசிக்கும் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களில் ஹீமோகுளோபினாபதி எனப்படும் இரத்த புரதம் தொடர்பான நோய்த் தாக்கம் உள்ளதை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் முதன்முறையாக மலைப்பிரதேச பகுதிகளில் இத்திட்டம் இன்று கொல்லிமலையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு சமவெளி பகுதிகளில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.

அதிகம் பேர் இதில் பரிசோதனை செய்யப்பட்டதால் நோய் பாதிப்பு உடனடியாக கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறார்கள், கர்ப்பிணிகள், வளர் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

ஏற்கனவே நடத்தப்பட்ட பரிசோதனை முகாம்கள் மூலம், பெண்கள் 54 சதவீதம் பேரும் இளைஞர்கள் 26 சதவீதம் பேரும் ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டது தெரியவந்ததை அடுத்து அவர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

தமிழகத்தில் உள்ள 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்பு கடி, நாய்க்கடி, விஷக்கடிகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை வழங்கும் வகையில் மருந்துகள் இருப்பில் உள்ளன. 

மருத்துவத்துறையில் 1021 மருத்துவர் பணியிடங்கள், 980 மருந்தாளுநர் பணியிடங்கலுக்கு வெகு விரைவில் நியமனம் வழங்கப்படும். இதற்காக இந்திய ஆட்சிப் பணி நிலையில் உள்ள ஒருவரை தலைமையாகக் கொண்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. 

மேலும், இத்துறையில் புதிதாக 4,200 பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் விரைவில் அறிவிப்பை வெளியிட உள்ளது. 

தமிழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஏற்கனவே 18 ஆக இருந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் தற்போது 25 ஆக தரம் உயர்த்தப்பட்டு அவற்றுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

2025-ம் ஆண்டுக்குள், காசநோய் இல்லா தமிழகம் படைக்கும் வகையில் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் வழங்கப்பட்டு தமிழகம் முழுவதும் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மாதத்திற்கு தேவையான புரதச்சத்து உணவுகள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. 

இதனால் வரும் 2025 க்குள் காச நோய் இல்லா தமிழ்நாடு என்ற நிலையை எழுத முடியும். கொல்லிமலை பொருத்தவரை இதுவரை பரிசோதனை செய்ததில், இவ்வட்டாரத்தில் எங்குமே காசநோய் இல்லை என்றும் காச நோய் இல்லா கொல்லிமலை என்றும் அறிவித்தார். 

153 வகையான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருந்துகளை செங்கல்பட்டு மாவட்டத்தில் உற்பத்தி செய்து வரும் அரசின் TAMPCOL நிறுவனத்தின் இரண்டாவது அலகு, மூலிகைகள் நிறைந்த கொல்லிமலையில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்க தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

ஏற்கனவே இந்த நிறுவனத்திற்கு தேவையான அஸ்வகந்தா, அசாம் மாநிலத்தில் இருந்து தருவித்து வந்த நிலையில், தற்போது வேடசந்தூர் பகுதியில் 700 ஏக்கரில் பயிரிடப்பட்டு வருகிறது.

என்றும் கொல்லிமலையில் அமைய உள்ள இரண்டாவது அலகு சித்த மருத்துவ தேவையை நிறைவு செய்யும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 

மேலும் கூறிய அவர், தேசிய மருத்துவ ஆணையம் குறை கூறியுள்ள 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறைகள் சரி செய்யப்பட்டு அது குறித்து அறிக்கை வழங்க புது டில்லிக்கு துறை சார் அதிகாரிகளை அனுப்பி உள்ளோம். என்றும்,

தமிழக முதல்வர் நாளை சென்னை திரும்பியவுடன் நாளை மறுநாள் அவரின் ஆலோசனையின் படி எனது தலைமையிலான குழுவினர் டெல்லி சென்று அங்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், ஆயுஷ் துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான சுகாதாரத்துறை கோரிக்கைகள் குறித்து பேச உள்ளோம். என்றும்,

சமீபத்தில் வேலூர் மாவட்ட மலைப்பகுதியில் பாம்பு கடித்து சிறுமி ஒருவர் இறந்த நிகழ்வில், அவரது குடும்பத்தினருக்கு உதவித்தொகை அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் வனத்துறை ஊரக வளர்ச்சித் துறை சார்பில் சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என்றும் 

நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனைத்து பணிகளும் நிறைவடைந்து நிலையில் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் அமைக்கும் பணிகள் விரைவில் முடிவடைந்த பின்னர், தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சரை அழைத்து வந்து அந்த மருத்துவமனை திறந்து வைக்கப்படும் என்றும் கொல்லிமலையில் செய்தியாளர்களிடம் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர் விஜயலட்சுமி, பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் கு. பொன்னுசாமி, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் கே. பூங்கொடி, நலப் பணிகள் இணை இயக்குனர் அ. இராஜ்மோகன், மருத்துவத் துறையினர், பொதுமக்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

Tags:

#namakkalnews , #namakkalnewsintamil , #namakkalnewslive , #namakkalnewstoday , #namakkalnewstodaytamil , #dmk #ministersubramanian #namakkalnewtodayslive #namakkalnewspapertoday , #இன்றையசெய்திகள்நாகை , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltamilnadu , #indrayaseithigalnagapattinamtamilnadu , #todaynewstamilnadu , #TheGreatIndiaNews #Tginews , #news , #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #namakkaltodaynews , #namakkallatestnews , #namakkalnews , #Latesttamilnadunewstamil , #spiritual #devotional #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0