• முகப்பு
  • district
  • திமுக மேயரின் அராஜக போக்கை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் தீர்மானம் புத்தகத்தை கிழித்தெறிந்ததால் மாநகராட்சியில் பெரும் பரபரப்பு.

திமுக மேயரின் அராஜக போக்கை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் தீர்மானம் புத்தகத்தை கிழித்தெறிந்ததால் மாநகராட்சியில் பெரும் பரபரப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36 வது வார்டில் தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து மூன்றாவது மண்டல மாமன்ற உறுப்பினர்களைத் தவிர மற்ற அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்ட அவசர கூட்டம் மேயர் மகாலட்சுமிய யுவராஜ் முன்னிலையில் நடைபெற்றது. மாமன்ற கூட்டத்துக்கு வந்த மேயர் திருக்குறள் உரையை படித்து முடித்தவுடன் மாமன்ற உறுப்பினர்களை பேசவிடாமல் ஒன்று முதல் முப்பத்தி மூன்று தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்று கூறிவிட்டு உடனடியாக மன்றத்திலிருந்து வெளியேறி விட்டார். இதனால் மன்றக் கூட்டம் ஆரம்பித்த ஒருசில நிமிடங்களிலேயே கூட்டம் முடிவுற்றது. எந்த ஒரு உறுப்பினரையும் பேசவோ விவாதம் நடத்தவும் அனுமதிக்காமல் சர்வாதிகாரப் போக்குடன் செயல்படும் மாநகராட்சி மேயரை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாமன்ற உறுப்பினர்கள் தீர்மான நகலை கிழித்து குப்பையில் வீசி தங்கள் கண்டனத்தை பதிவிட்டனர். மேயர் மகாலட்சுமி பதவியேற்ற நாளிலிருந்து திமுக மாமன்ற உறுப்பினர்களின் வார்டுகளை தவிர மற்ற வார்டுகளுக்கு எந்தவிதமான நிதியும் ஒதுக்காமல் பாராபட்சமாக நடந்து கொள்கிறார் என்றும் மக்களின் அடிப்படை தேவையான குடிதண்ணீர் மற்றும் துப்புரவு பணிகளை கூட சரிவர மேற்கொள்ளாமல் மாநகராட்சி அலுவலர்கள் மெத்தனமாக செயல்படுகின்றார்கள் என்றும் மேயர் அனைத்து விஷயங்களிலும் கமிஷன் பெற்றுக்கொண்டு தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார் என்றும் மாமன்ற உறுப்பினர்கள் புலம்புகின்றனர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended