Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

இன்று பொதுக் குழுவில் நடந்த சம்பவங்கள் சர்வாதிகாரத்தின் உச்சம் என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறினார். அதிமுகவின் பொதுக் குழுவை அவைத் தலைவர் கூட்டமுடியாது என ஓ. பன்னீர்செல்வம் தரப்பு துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறினார். அதிமுக. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்வு செய்தது செல்லாது என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்து உள்ளார். அதிமுக. துணைஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.... புதியதாக கொண்டு வந்த தீர்மானத்தை நிராகரித்து வெளி நடப்பு செய்தோம். அதிமுக.வின் நடைமுறைகளை மாற்றி உள்ளனர். இன்று பொதுக் குழுவில் நடந்தசம்பவங்கள் சர்வாதிகாரத்தின் உச்சம். அதிமுக. பொதுக் குழு ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. அவைத் தலைவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் தேர்வு செய்ய முடியும். அதிமுக. அவை த்தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்வு செய்தது செல்லாது. பொதுக் குழுவை கூட்டுவதற்கு அவைத்தலைவருக்கு அதிகாரம் இல்லை. ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் பொதுக் குழுவை அவைத் தலைவர் கூட்ட முடியாது. நீதிமன்ற தீர்ப்பு தெளிவாகவந்து உள்ளது. அதைமீறி தீர்மானங்களை நிறை வேற்றியுள்ளனர். 23 தீர்மானங்கள் தான் நிறை வேற்ற வேண்டுமென நீதிமன்ற தீர்ப்பு கூறியநிலையில், அதையும் மீறிதீர்மானம் போடப்பட்டு உள்ளது. பொதுக் குழு உறுப்பினர்கள் கையெழுத்து போட்டதாக சொல்லப் பட்ட கடிதம் உண்மையானது அல்ல, போலியாக பலர் கையெழுத்து போட்டு உள்ளனர். அடுத்த பொதுக் குழு கூடுவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர உள்ளோமென கூறினார். செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

Tags:

#தமிழ்செய்தி #திகிரேட்இந்தியாசெய்தி #தினசரிசெய்திகள் #இன்றைய செய்தி #செய்திசேனல் #சென்னைசெய்தி #தமிழகசெய்திகள் #நகரசெய்தி #மாவட்ட செய்தி #இந்திய செய்தி #தமிழ்நாடு #சென்னை #மாவட்டம் #புதுச்சேரி #அரசியல் #குற்றம் #கல்வி #ஆன்மீகம் #உலகம் #மற்றசெய்திகள் #மணமாலை #மணமேடை #மணமக்கள் #கல்யாணமாலை #பக்தி #இன்றையசெய்திகள் #முக்கியசெய்திகள் #இன்றையசெய்திகள் #நகராட்சி #சினிமா #கலை #விளையாட்டு #மருத்துவம் #பாதுகாப்பு #அறிவியல் #ஜோதிடம் #அரசியல் #மருத்துவம் #பல்சுவை #போக்குவரத்து #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0