• முகப்பு
  • district
  • பட்டா நிலத்தில் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரை காரணமே இல்லாமல் இடித்ததற்கு நஷ்ட ஈடு கேட்டு 80 வயது முதியவர் நீதி கேட்டு நடையாய் நடக்கும் பரிதாபம்.

பட்டா நிலத்தில் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரை காரணமே இல்லாமல் இடித்ததற்கு நஷ்ட ஈடு கேட்டு 80 வயது முதியவர் நீதி கேட்டு நடையாய் நடக்கும் பரிதாபம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 80 வயது உடைய முதியவர் ஒருவர் ஊன்றுகோல் வைத்துக்கொண்டு தள்ளாடி தள்ளாடி நடந்து வந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து எனக்கு நீதி வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி அவர்களிடம் முறையிட்டார். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் அவர்களையும் சந்தித்து நீதி கேட்டு கோரிக்கை மனு அளித்தார். அவரின் பரிதாப நிலையை கண்ட நமது செய்தியாளர்கள் அவரிடம் விசாரித்ததில் அவர் பெயர் ஜி.சி.ஜெயின் என்றும் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் டிவிஎஸ் நிறுவனத்தின் மோட்டார் பைக் ஏஜென்ட் ஆக உள்ளார் என்றும் தெரியவந்தது. மிகவும் தள்ளாத வயதில் உதவிக்கு கூட ஆள்துணை இல்லாமல் ஏன் இப்படி அவதிப்படுகிறீர்கள் எனக் கேட்டதற்கு அவர் கீழ் கண்டவாறு வேதனையுடன் கூறினார். சுங்குவார் சத்திரம் பகுதியில் 1982 ஆம் ஆண்டில் தன்னுடைய ஷோரூம் பின்புறம் 3.5 ஏக்கர் பரப்பளவில் பட்டா நிலத்தை வாங்கி சுற்றுச்சுவரை எழுப்பி பாதுகாத்து வருகின்றேன். எந்த விதமான காரணமும் இன்றி வருவாய்த்துறையினர் முன்னிலையில் சில சமூகவிரோதிகள் அந்த சுற்றுச்சுவரின் 6 பகுதிகளில் 10 அடி நீளத்திற்கு ஜேசிபி எந்திரங்கள் வைத்து இடித்து விட்டனர். அதனைத் தொடர்ந்து நான் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டேன். என்னுடைய புகார் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதேபோல் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்திலும் உத்தரவு பெற்றேன். அந்த நீதிமன்ற உத்தரவை சுங்குவார்சத்திரம் காவல் துறையினரிடம் காண்பித்து முறையிட்டேன். அவர்கள் தகுந்த பதிலை அளிக்காமல் என்னை அலைக்கழித்தனர். அதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை துணைத் தலைவர் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் ஆகியவர்களையும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களையும் சந்தித்து நீதி கேட்டு பல மாதங்களாக அலையாய் அலைந்து கொண்டு உள்ளேன். என்னுடைய உடல்நிலை மற்றும் வயதையும் பொருட்படுத்தாமல் மாவட்ட நிர்வாகமும் ,காவல் துறையினரும் மெத்தனப் போக்கை கடைபிடிக்கின்றனர். நீதிமன்ற உத்தரவையும் மதிக்கவில்லை. எனவே என்னுடைய பட்டா நிலத்தில் கட்டிருந்த சுற்று சுவரை இடித்து தள்ளியதற்க்கு 4.5 லட்ச‌ ரூபாய் நஷ்ட ஈடு கேட்டும், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி ஏதும் பெறாமலேயே சுற்று சுவரை இடித்ததை வேடிக்கை பார்த்த வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ,வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்ற செயலாளர் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தள்ளாத வயதிலும் நீதி கேட்டு நடையாய் நடந்து கொண்டுள்ளேன் என மிகுந்த வருத்தத்துடன் கூறினார். பேட்டி - ஜி.சி.ஜெயின் காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

VIDEOS

RELATED NEWS

Recommended