• முகப்பு
  • போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் ரஷ்யா இடையேயான 3 ஆம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் ம

போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் ரஷ்யா இடையேயான 3 ஆம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் ம

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உக்ரைனுக்குள் கடந்த மாதம் 24 ஆம் தேதி நுழைந்த ரஷ்ய ராணுவம், தலைநகர் கிவ் மற்றும் 2வது பெரிய நகரமான கார்கிவ் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து தாக்கி வருகிறது. ரஷ்யாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிவதால் உக்ரைன் உருக்குலைந்து போயுள்ளது. சில இடங்கள் ரஷ்யாவின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. ரஷ்யாவின் தாக்குதலுக்கு பயந்து இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உக்ரைனை விட்டு வெளியேறி ருமேனியா, போலந்து, போன்ற அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்ய நாட்டு பிரதிநிதிகள், பெலராஸில் இருமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். முதலாவதாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், 2வது பேச்சுவார்த்தையில் மனிதாபிமான அடிபப்டையில் சில நடவடிக்கைகள் முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த சனிக்கிழமை உக்ரைனின் இரண்டு முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வண்ணம் சில மணி நேரங்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது Donetsk மற்றும் luhansk ஆகிய பகுதிகளை தன்னாட்சி பெற்ற பகுதிகளாக அறிவிக்க ரஷ்யா வலியுறுத்தியது. ஆனால் போர் நிறுத்தம் தொடர்பாக நேற்றைய பேச்சுவார்த்தையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து விரைவில் 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended