உதகையில் இன்று துவங்கியது 18 வது ரோஜா கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

சுரேஷ்பாபு

UPDATED: May 13, 2023, 8:12:46 AM

உதகையில் இன்று துவங்கியது 18 வது ரோஜா கண்காட்சி 13.5.2023 முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி ஆகியோர் 18 ஆவது ரோஜா கண்காட்சியை துவக்கி வைத்தனர். 

18வது ரோஜா கண்காட்சியின் சிறப்பம்சமாக 40 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு 30 அடி உயரத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை ரோஜா மலர்களால் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட ஈபில் டவர், 40 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட மட்டைப்பந்து,

கால்பந்து, ஆக்கி, இறகுப்பந்து போன்ற வடிவமைப்பு ,யானைகள், மிக்கி மௌஸ், மீண்டும் மஞ்சப்பை, பல்வேறு வண்ண ரோஜா மலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான நுழைவு வாயில் போன்ற வடிவமைப்புகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

இயற்கை எழில் கொஞ்சும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 1995ம் ஆண்டு 4.40 ஏக்டர் பரப்பளவில் உலகத்தில் உள்ள 4200 ரகங்களில் உள்ள ரோஜா செடிகளில் 35 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்து ரோஜா பூங்கா துவங்கப்பட்டது.

தென்னிந்தியாவில் ரோஜா பூக்களுக்கு என தனியாக உள்ள ஒரே பூங்கா உதகை ரோஜா பூங்கா என்பது சிறப்பம்சமாகும்.

தற்போது உதகையில் கோடை விழா நடைபெற்ற ஒரு நிலையில் கோடை விழாவின் ஒரு பகுதியாக 18வது ரோஜா கண்காட்சி இன்று துவங்கியது.

இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த ரோஜா கண்காட்சி சுமார் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால்.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரோஜா கண்காட்சிக்காக, ரோஜா பூங்கா தயார்படுத்தப்பட்டு தற்போது ரோஜா பூங்காவில் மஞ்சள், ஊதா, வெள்ளை, சிவப்பு,பச்சை உள்ளிட்ட பல்வேறு நிறங்களிலும் இரு வண்ண ரோஜா மலர்கள் என ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன .

ஒரே செடியில் 10க்கும் மேற்பட்ட ரோஜா மலர்கள் என பல்வேறு செடிகளில் பூத்துக் குலுங்கும் ரோஜா மலர்கள் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

உலகத்தில் உள்ள 4400 ரகங்களில் சேகரிக்கப்பட்டு இங்கு வளர்க்கப்படும் ரோஜா செடிகளில் இருந்து சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. 

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் காந்தி ஆகியோர் 18-வது ரோஜா கண்காட்சியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.  

இதைத்தொடர்ந்து மலர் அலங்காரங்களை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் காந்தி ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்த ஆண்டு சிறப்பம்சமாக ரோஜா கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 40,000 ரோஜா மலர்களைக் கொண்டு உதகை 200 வடிவம், யானைகள் போன்ற உருவமும் இளைஞர்கள் மத்தியில் விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்

டென்னிஸ் பேட், கால்பந்து, மிக்கி மவுஸ், இறகு பந்து போன்றவையும், மீண்டும் மஞ்சப்பை உள்ளிட்ட பல்வேறு ரோஜா மலர் அலங்காரங்கள் பார்வையாளர்களை கவரும் வகையில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு சிறப்பம்சமாக 40 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு 30 அடி உயரத்தில் ஈபிள் டவர் அமைக்கப்பட்டுள்ளது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended