• முகப்பு
  • pondichery
  • குரு அப்பா பைத்தியசாமி கோயிலில் 163-வது குருபூஜை விழா .

குரு அப்பா பைத்தியசாமி கோயிலில் 163-வது குருபூஜை விழா .

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி மிகவும் தெய்வ பக்தி உடையவர். இவரின் ஆன்மீக குருவாக அப்பா பைத்தியசாமிகள் ஆவார். சேலத்தில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவிலில் அடிக்கடி சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அரசியல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பது என்றாலும், தனது கட்சியில் எந்தெந்த தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்தும் சேலத்தில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவிலில் சீட்டு எழுதி போட்டி எடுத்து அதன்படி வேட்பாளரையும் தேர்வு செய்து வருகிறார். தீவிரமாக அப்பா பைத்தியசாமி மீது கொண்டுள்ள பக்தியின் காரணமாக புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள தனது வீட்டின் அருகே அப்பா பைத்தியசாமி கோவிலை கட்டியுள்ளார். இங்கு வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், கோரிமேட்டில் உள்ள குரு அப்பா பைத்தியசாமி கோயிலில் 163-வது குருபூஜை விழா வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது. காலை முதல் அப்பா பைத்தியசாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன. இதில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு தனது கையால் சிறப்பு பூஜைகள் செய்தும், சுவாமிக்கு தீபாராதனை காண்பித்தார். தொடர்ந்து அங்கு வந்த பக்தர்களுக்கு தனது கையால் விபூதி இட்டும், பிரசாதங்களையும் வழங்கினார். இந்த விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் முதலமைச்சர் ரங்கசாமி தனது கையால் அறுசுவை விருந்து வழங்கினார். பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

VIDEOS

RELATED NEWS

Recommended