திருப்புல்லாணி சுற்று வட்டார மக்களின் 15 வருட கோரிக்கை நிறைவேறுமா

கார்மேகம்

UPDATED: May 29, 2023, 8:54:57 AM

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணிக்கு 15 வருடத்திற்கும் மேலாக துனை மின் நிலையம் அமைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திருப்புல்லாணி பகுதி மக்கள் இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டே துனை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டும் இன்றுவரை துனை மின் நிலைய பணி துவங்கவில்லை.

அரசு 15 இடங்களில் துனை மின் நிலையம் அமைக்க அனுமதி வழங்கியதில் திருப்புல்லாணியும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

திருப்புல்லாணி சுற்று வட்டாரப் பகுதியில் அடிக் கடி ஏற்படும் மின்தடங்கள், மின் பற்றாக்குறை இவற்றை யெல்லாம் உடனுக்குடன் சரி செய்ய போதிய மின் ஊழியர்கள் இல்லாமல் மின் தடங்கள் ஏற்பட்டால் பல மணி நேரம் கடந்த பிறகுதான் மின் தடங்கள் நீக்கப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் மனிதனின் அத்தியாவாசியம் என்பது அனைவருக்கும் தெரியும் அதே சமயம் மின்சாரவாரியம் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இத்தனை ஆண்டுகால கோரிக்கையை கிடப்பில் போடப் பட்டுள்ளன, குறிப்பாக திருப்புல்லாணி சுற்று வட்டாரப் பகுதிகளில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 100 முறையாவது மின் தடங்கள் ஏற்படுகின்றது.

இதனால் பொதுமக்கள் வர்த்தகர்கள் சின்னச் சின்ன தொழில் செய்வோர் மின்சாரத்தை நம்பிய தொழில்கள் செய்வோர் மிகவும் சிறமம் அடைகின்றனர்.

பொதுவாக மக்களின் சிறமம் பற்றி மின்வாரிய உயர் மட்ட அலுவலர்கள் கவணத்திற்கு எட்டவில்லை என்று தெரிகின்றது.

அரசு நல்ல திட்டங்கள் செய்ய  நினைத்தாலும் அரசு அலுவலர்கள் செயல்படாததினால் இன்னும் இது போன்ற மின்சாரப் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கிறது.

எனவே திருப்புல்லாணி சுற்று வட்டார மக்களின் துனை மின் நிலைய கோரிகாகையை மின்சார வாரியம் எப்போது நிறைவேற்றும் என்று இப்பகுதி மக்கள் கேள்வி விடுக்கின்றனர்.

இம் மக்களின் கோரிக்கை குறித்து அரசும் மின்சாரவாரிய உயர்மட்ட அலுவலர்களும் விரைந்து மின் தடைகளை போக்க துனை மின்நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended