Author: மாமுஜெயக்குமார்

Category: கல்வி

கப்பல் இன்ஞினியர் ஆவது தான் எனது லட்சியம்... விருப்பம்...என பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் அ.பிரவின் மனம் திறந்த பேட்டி.

தேர்வு முடிவில், வழக்கம் போல மாணவர்களை விட மாணவியர்களே அதிக மதிப்பெண்கள் பெற்று தங்களது சாதனையை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

இந் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மெட்ரிக்குலேசன் பள்ளியில் பயிலும் மாணவர் அ.பிரவின் 482 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலாவதாக வந்து சாதனை படைத்துள்ளார்.

இவர், மூத்த பத்திரிகையாளர் மா.முத்துச்சாமி - இராஜரெத்தினம் தம்பதியரின் மூத்த மகன் மா.மு.மணவாளன் - கிருஷ்ணவேணி தம்பதியரின் செல்ல பேரனும், அன்பு-சண்முகப்பிரியா (எ) கலைவாணி தம்பதியரின் மகன் ஆவார்.

லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்ற அ.பிரவின் தனது கல்வி, தனது சிந்தனைகள் குறித்து மடை திறந்த வெள்ளம் போன்றும், கடலில் சீறிப் பாய்ந்துவரும் அலைகள் போன்றும் மட... மடவென தனது மகிழ்ச்சியை தெரிவித்ததாவது :

நான் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு பள்ளி முதல்வர், ஆசிரியப் பெருமக்கள், பெற்றோர்கள், தாத்தா - பாட்டி என குடும்பத்தினர்கள் என்னை உற்சாகப்படுத்தி வந்ததால் படிப்பில் அதிக கவனம் செலுத்தி படித்து வந்தேன்.

தேர்வில் 500 -க்கு 482 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவராக வந்த மகிழ்ச்சியிருக்கும் பட்சத்தில், ஏதாவது ஓரிரு பாடங்களில் சதம் எடுக்க முடியாதது தான்.

வருங் காலங்களில் இன்னும் நன்கு படித்து தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று சாதிப்பேன்.

எல்.கே.ஜி.,யூ.கே.ஜி. எங்கள் இல்லம் அருகே பாரதிநகரில் உள்ள சுபிக்ட்சா பள்ளி பயின்றேன். 1-ம் வகுப்பு முதல் தற்போது 10-ம் வகுப்பு வரை லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்து வருகிறேன். பள்ளியில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்று வந்துள்ளேன்.

கல்வியோடு, எனக்கு ஓவியம் வரைவதில் மிகவும் ஆர்வம் அதிகம். படிப்பு நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் நான் பார்த்தவற்றை, எனக்கு நெருக்கமானவர்களை வரைந்து அசத்தியுள்ளேன்.

ராமநாதபுரம் மாவட்ட அளவில் நடந்த ஓவியப் போட்டியில், கலந்து கொண்டு ஓவியம் வரைந்து மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளேன்.

எனக்கு பிடித்தமான...அறிவுபூர்வமான... விளையாட்டு என்பதால் செஸ் விளையாடுவதிலும் கவனம் செலுத்துவேன்.

நான் கப்பல் இன்ஞினியராக வேண்டும் என்பதே எனது லட்சியம்... விருப்பம்... அதற்கேற்றார் போன்று அதிக கவனம் செலுத்தி படிப்பேன் என மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

Tags:

#Ramanathapuramnews, #sslc #sslcresult #sslc2023 #Ramanathapuramnewstoday , #Ramanathapuramnewspapertoday , #Ramanathapuramnewspaper, #Ramanathapuramnewschannel , #Ramanathapuramnewsupdate, #Ramanathapuramlatestnews, #Ramanathapuramnews , #Ramanathapuramnewstodaylive , #Ramanathapuramlatestnews, #latestnewsinRamanathapuram ,#TheGreatIndiaNews , #Tginews , #newstamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #Ramanathapuramnewstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்ராமநாதபுரம் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalramanathapuram , #todaynewsramanathapuramtamilnadu , #ராமநாதபுரம்செய்திகள்
Comments & Conversations - 0