10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின.

நெல்சன் கென்னடி

UPDATED: May 19, 2023, 10:41:18 AM

தமிழ்நாட்டில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுதிய 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாயின

www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டன.

தமிழ்நாடு முழுவதும் 91.39% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி.

மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%  மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16% தேர்ச்சி, மாணவர்களை விட மாணவிகள் 6.50% அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 3,718 கடந்த ஆண்டை விட 1.32% மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

97.67% தேர்ச்சி விகிதத்துடன் பெரம்பலூர் மாவட்டம் முதல் இடம்.

97.53% தேர்ச்சி விகிதத்துடன் இரண்டாம் இடம் பிடித்தது சிவகங்கை மாவட்டம்.

96.22% தேர்ச்சி விகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் மூன்றாவது இடம்.

ராணிப்பேட்டை மாவட்டம் 83.54% தேர்ச்சி விகிதத்துடன் கடைசி இடம் பிடித்தது.

கணிதத்தில் 3,649 மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

அறிவியல் பாடத்தில் 3,584 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.

சமூக அறிவியல் பாடத்தில் 320 மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண் எடுத்தனர்.

தேர்வு எழுதிய 9.14 லட்சம் பேரில் 89 மாணவர்கள் ஆங்கிலத்தில் முழு மதிப்பெண் பெற்றனர்.

பத்தாம் வகுப்பு தமிழ் மொழிப் பாடத்தில் ஒருவர் கூட 100 மதிப்பெண் பெறவில்லை

தேர்வு எழுதிய 10,808 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 9,703 பேர் தேர்ச்சி பெற்றனர்.

மாற்றுத்திறனாளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 89.77% பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 264 சிறைவாசிகளில் 112 பேர் தேர்ச்சி பெற்றனர்.

1,026 அரசுப் பள்ளிகளில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர்.

பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.45%  ஆங்கில மொழிப் பாடத்தில் 98.93% மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர்.

100% மதிப்பெண் பெறாத போதிலும் தமிழ் பாடத்தில் 95.55% மாணவர்கள் தேர்ச்சி.

கணிதப் பாடத்தில் 95.54% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அறிவியல் பாடத்தில் 95.75% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

சமூக அறிவியல் பாடத்தில் 95.83% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் 89.12% மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.

  • 1

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended