• முகப்பு
  • கல்வி
  • தென்காசி பள்ளிக் கல்வித்துறையும் HCL நிறுவனமும் இணைந்து 12ஆம் வகுப்பு தேர்வில்  தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வழங்கும் ஓர் பொன்னான வாய்ப்பு!

தென்காசி பள்ளிக் கல்வித்துறையும் HCL நிறுவனமும் இணைந்து 12ஆம் வகுப்பு தேர்வில்  தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வழங்கும் ஓர் பொன்னான வாய்ப்பு!

ராஜ்குமார்

UPDATED: May 17, 2023, 7:16:47 PM

HCL நிறுவனம் Techbee திட்டத்தின் வாயிலாக 2023 ஆம் ஆண்டு *12ஆம் வகுப்பு தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்வில் தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளி மாணவர்களுக்கும் (Matric/CBSE/ICSE) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும்* பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புடன் உயர்கல்வி பெறும் வாய்ப்பை அளிக்கிறது.

அதற்கான தேர்வு online இல் *27 மற்றும் 28 மே 2023 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் காலை 09:30 மணி முதல் மாலை 05:30 மணி வரை* _S.வீராச்சாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் (SVC Engineering College Of Technology)_ வைத்து நடைபெறுகிறது.

தேர்வு எழுத வரும் மாணவர்கள் 10th, 12th Mark Sheet, Aadhar Card, Passport Size Photo-1,Android Mobile Phone மற்றும் மதிய உணவு கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நீங்கள் தேர்வு செய்யப்பட்டால் *HCL-TechBee வழங்கும் பயிற்சி மற்றும் வேலையுடன் உயர் கல்வியை BITS Pilani/SASTRA/AMITY/KL University/ IIM Nagpur பல்கலைக்கழகத்தில் HCL வழங்கும் உதவித் தொகையோடு படிக்கலாம். Internship பயிற்சியின் போது 7வது மாதம் முதல் 12வது மாதம் வரை உதவித்தொகை மாதம் 10000/- வழங்கப்படும்.

இத்தேர்வில் 2023ஆம் ஆண்டு 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற அனைத்து பிரிவு அரசு/அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இத்தேர்விற்கு வரும் மாணவர்கள் கீழ்க்கண்ட Link இல் பதிவு செய்துவிட்டு தேர்விற்கு வரவும். 

பதிவு செய்ய: 

https://forms.office.com/r/q3vmdm7qdi

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended