• முகப்பு
  • அரசியல்
  • திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில் உள்ள, தமிழ் அறிஞர் கால்டு வெல் நினைவு இல்லம், 2 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படும் - சபாநாயகர் அப்பாவு.

திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில் உள்ள, தமிழ் அறிஞர் கால்டு வெல் நினைவு இல்லம், 2 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படும் - சபாநாயகர் அப்பாவு.

மேலப்பாளையம் ஹஸன்

UPDATED: May 7, 2023, 3:15:46 PM

"தமிழ் அறிஞர்"பேராயர் ராபர்ட் கால்டுவெல்லின், 209-வது பிறந்த தினவிழா, இன்று (மே.7) காலையில், திருநெல்வேலி மாவட்டம், இடையன்குடியில் உள்ள, அவருடைய நினைவு இல்லத்தில், தமிழக அரசு சார்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப.கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், முன்னிலை வகித்தார். விழாவில், தமிழக சபாநாயகர் மு.அப்பாவு, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, நினைவு இல்லத்தில் நிறுவப்பட்டிருக்கும், க கால்டுவெல்லின் மார்பளவு சிலைக்கு, மலர் மாலை அணிவித்து, மரியாதை செய்தார்.

அதன் பின்னர், சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:- "அயர்லாந்து நாட்டில் இருந்து, கிறிஸ்தவ சமயப்பணிகளுக்காக, தமிழகம் வந்த, பேராயர் ராபர்ட் கால்டுவெல், திராவிட மொழிகளுக்கெல்லாம் மூல மொழியாகிய, தமிழ் மொழியை மேம்படுத்திடும் வகையில், ஆங்கில மொழியில் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்னும் நூலை 1856 ஆம் எழுதி, உலகின் முதல் மொழி தமிழ் மொழி தான் என்பதை உலகம் அறியச் செய்தார்.

1881-ஆம் ஆண்டில், "நெல்லை மாவட்ட வரலாறு" என்ற நூலையும் எழுதினார். இவருடைய இந்த இரு நூல்களும், தமிழுக்குக் கிடைத்த பொக்கிஷமாக, இன்றும் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றன.

கால்டுவெல்லின், தமிழ்ச்சேவையை அங்கீகரித்திடும் வகையில், அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி, 2011-ஆம் ஆண்டு கால்டுவெல் வாழ்ந்த, நெல்லை மாவட்டம் இடையன்குடியில் உள்ள வீட்டை, நினைவு இல்லமாக அறிவித்தார்.

இதற்கு முன்னர், தமழகத்தில் ஆட்சி செய்த ஆட்சியாளர்களால், 10 ஆண்டுகளாக கால்டுவெல் நினைவு இல்லமானது, முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால், தற்போது இந்த இல்லம் சிதிலம் அடைந்து காணப்படுகிறது.

எனவே இதனை புதுப்பித்துத்தர, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை, வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை தாயுள்ளத்துடன், தமிழக முதல்வர் ஏற்றுக்கொண்டார்.

பழைமை மாறாமல் அப்படியே, இதனை புதுப்பிப்பதற்காக, மொத்தம் 2 கோடியே, 06 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டம் தயாரிக்கப்பட்டு, அதன் முன்மொழிவு அரசுக்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விரைவில் புதுப்பிக்கும் பணி தொடங்கும்!"- இவ்வாறு, சபாநாயகர் அப்பாவு கூறினார். விழாவில், அரசு அதிகாரிகள், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உட்பட, பலரும் கலந்து, கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended