Author: THE GREAT INDIA NEWS

Category: political

பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது . திருவள்ளூர் மாவட்டம் , மப்பேடு , கீழச்சேரியில் உள்ள சேக்ரட் ஹார்ட் , பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் திருத்தணி, சூரிய நகரம், தெக்கனூர் காலனியை சேர்ந்த சரளா என்கிற மாணவி பிளஸ் - 2 படித்து கொண்டு விடுதியில் தங்கி வந்த மாணவி சரளா தூக்கு போட்டு தற்க்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. மாணவி சரளாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பில் தெரிவித்து கொள்கிறோம். மேலும் உயிரிழந்த மாணவி சரளா குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ 25 லட்சம் இழப்பிடு வழங்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது. மாணவி சரளா தற்க்கொலைக்கான உண்மை காரணங்கள் என்ன வென்று கண்டறிந்து சம்பந்த பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும் பள்ளிமாணவிகளின் தற்க்கொலை சம்பவங்களை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இயங்கி வரும் பள்ளி மாணவிகள் தங்கும் விடுதிகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது. எனவே : தமிழகத்தில் பள்ளி மாணவிகளின் தற்க்கொலை சம்பங்கள் தொடர்ந்த வண்ணமாக நடை பெற்று வருகிறது . ஆகவே இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Tags:

#இன்றையசெய்திகள்சென்னை #kayalabbas #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #indrayaseithigaltamilnadu #indrayaseithigalchennai #indrayaseithigalchennaitamilnadu #todaynewstamilnadu #todaynewschennaitamilnadu #indrayaseithigalchennaitamilnadu #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #madurainews #karurnews #dharmapurinews #virudhunagarnews #chennainews #kovainews #Trichynews #nilgirinews #salemnews #tuticorinnews #dindigulnews #Thirupurnews #pudukottainews #cudaloorenews #coimbatorenewstoday #chengalpetnewstodaytamil #sivagangainewstodaytamil #Rameshwaramnewstodaytamil #vellorenewstoday #nagapatinamnewstoday #kanchipuramnewstodaytamil #indrayamukkiyaseithigal #indrayaseithigal #thalaipuseithigal #mukkiyaseithigal #perambalurlatestnewstamil #nellaitodaynewstamil #thiruvannamalainewstoday
Comments & Conversations - 0