Author: THE GREAT INDIA NEWS

Category: district

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு தமிழக நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வாய்ப்பில்லை என தெரிவித்திருந்தார். அவருடைய பதிலைக் கேட்ட அரசு ஊழியர்கள் மிகவும் அதிர்ந்து போயினர். 2003 ஆம் ஆண்டிலிருந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி பல்வேறு போராட்டங்களை அரசு ஊழியர்கள் நடத்தி வந்தனர். கடந்த ஆண்டு எதிர்க்கட்சியாக இருந்த திமுக கட்சி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதேபோல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நடத்திய மாநில கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என உறுதி அளித்திருந்தார். இந்நிலையில் சனிக்கிழமை அன்று சட்டப்பேரவையில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் பொருளாதாரத்தை காரணம் காட்டி பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த முடியாது என தெரிவித்தார். நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் மற்றும் திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் ஸ்ரீபெரும்புதூர் ,குன்றத்தூர், வாலாஜாபாத், உத்தரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய ஒன்றியங்களில் சுமார் 25ககும் மேற்பட்ட அரசு அலுவலகத்தின் முன்பு மாவட்டத் தலைவர் லெனின், மாவட்ட செயலாளர் துரைமருகன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரியும் சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலவரையற்ற ஊதியத்தை அமல்படுத்தக்கோரியும் நிதி அமைச்சரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் நாளை முடிவுர உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்காவிட்டால் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

Tags:

#இன்றையசெய்திகள்காஞ்சிபுரம் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #Kanchipuramnewstodaytamil #Kanchipuramflashnewstamil #kanchipurambreakingnewstamil #vanigarsangamkandanaaarpattam
Comments & Conversations - 0