• முகப்பு
  • கல்வி
  • மருத்துவ உபகரணங்களை மருத்துவ மாணவர்கள் பயன்பாட்டிற்காக தமிழக வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன் வழங்கினார்

மருத்துவ உபகரணங்களை மருத்துவ மாணவர்கள் பயன்பாட்டிற்காக தமிழக வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன் வழங்கினார்

முத்தையா

UPDATED: May 13, 2023, 7:31:47 PM

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே. ஆர். என். ராஜேஷ்குமார் 

தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.41.03 இலட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களை மாணவர்கள் பயன்பாட்டிற்காக தமிழக வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா மதிவேந்தன் வழங்கினார்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற விழாவில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.41.03 இலட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பயன்பாட்டிற்காக தமிழக வனத்துறை அமைச்சர் மருத்துவர்.மா.மதிவேந்தன் நேற்று (13.05.2023) வழங்கினார்.

மேலும் மாணவர் மன்றத்தினை வனத்துறை அமைச்சர் திறந்து வைத்து, மருத்துவ கல்லூரி பயிலும் மாணவச்செல்வங்களுக்கு தேவையான நிதியுதவியை வழங்கிட விருட்சம் என்ற அமைப்பினையும் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ் குமார் , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன் பேசும் போது தெரிவித்ததாவது:-

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் மன்றத்தினையும், மருத்துவ கல்லூரி பயிலும் மாணவ செல்வங்களுக்கு தேவையான நிதியுதவியை வழங்கிட "விருட்சம்" என்ற  அமைப்பினையும் தொடங்கி வைப்பதில்பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மேலும் இந்த கல்லூரி விழாவில் கலந்து கொள்வதில் எனது கல்லூரி கால அனுபவங்களை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. 

இந்த கல்லூரியில் பயின்ற முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் 100% தேர்ச்சி பெற்றுள்ளமைக்கு அனைவருக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே. ஆர். ராஜேஷ்குமார் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்காக ரூ.41.03 இலட்சம் மதிப்பீட்டில் பயிற்சி மருத்துவ உபகரணங்களை அவரது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கி உள்ளார். 

அது மட்டுமல்லாது புற்றுநோய் சிகிச்சைக்காகவும். கொரோனா கால சிகிச்சைக்காகவும் பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

இன்று தொடங்கப்பட்டுள்ள விருச்சகம் எனும் அமைப்பிற்கு பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தனது ஒரு மாத ஊதியத்தினை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

அதேபோன்று நானும், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினரரும் எங்களது ஒரு மாத ஊதியத்தினை இந்த அமைப்பிற்கு நன்கொடையாக வழங்க உள்ளோம். 

மாணவச் செல்வங்கள் அனைவரும் இந்த கல்லூரி காலத்தினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு நன்றாக கல்வி பயின்று எதிர்காலத்தில் நல்லதொரு மருத்துவ சேவையினை ஆற்ற வேண்டும். நாமக்கல் மருத்துவக் கல்லூரிக்கு நற்பெயரை பெற்றுத் தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர்.சாந்தா அருள்மொழி, துணை முதல்வர் மருத்துவர் எஸ்.வெங்கடசுப்பிரமணியன், அரசு வழக்கறிஞர் .செல்வம் ஆகியோர் உட்பட மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended