Author: THE GREAT INDIA NEWS

Category: district

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு. தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் தயா.பேரின்பம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் வீரராஜன் வரவேற்றார். கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் கலை இலக்கிய பேரவை மாவட்ட செயலாளர் முருகேசன் / கிராம தெருக்கூத்து கலைப் பேரவை திட்டக்குடி தொகுதி செயலாளர் ராயர் / மகளிரணி அனிதா / அஞ்சலை அம்மாள் மற்றும் கிளை நிர்வாகிகள் பெரியசாமி / சின்னஏட்டு/ சாமிதுரை / பழனிமுத்து/ இளங்கோவன்/ ராஜமாணிக்கம் / மற்றும் பலர் கலந்து கொண்டனர். கோரிக்கைகள் மற்றும் நடைபெற்ற நிகழ்வுகள். கடலூர் மாவட்டம் / திட்டக்குடி நகராட்சியில் உள்ள (மெயின் ரோட்டில்) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி (மற்றும்) அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு போர்கால அடிப்படையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தியும் திட்டக்குடி பேருந்து நிலையத்திற்கு முன்பாக பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கு இடையூறாக பேருந்துகள் நிறுத்தப்படுவதால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே அனைத்துப் பேருந்துகளும் அண்ணா பேருந்து நிலையத்திற்குள் சென்று நிறுத்த வலியுறுத்தியும். திட்டக்குடி நகராட்சி மெயின் ரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு அமைதியான வழியில் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரி அவர்கள் எழுத்துபூர்வமாக ஒப்புதல் தருகிறோம் என்று கூறியதன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டு நெடுஞ்சாலை துறை அலுவலகம் வந்தோம். பிறகு எழுத்துப்பூர்வமாக கடிதம் தர மாட்டோம் என்று கூறினார்கள். இதனால் விரக்தியின் உச்சத்தில் இருந்த தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியினர் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு கண்டனக் கோஷங்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம் . உதவி கோட்ட பொறியாளர் ஒப்புதல் கடிதம் அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. கடலூர் மாவட்ட செய்தியாளர் சூரியமூர்த்தி.

Tags:

#cuddalorenews #cuddalorenewstoday #cuddalorenewstodaylive #cuddalorenewsyesterday #cuddalorenewsintamil #cuddalorenewspapertoday #இன்றையசெய்திகள்கடலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #neyvelinewstoday #peoplestruggle
Comments & Conversations - 0