• முகப்பு
  • காஞ்சிபுரம் சரக காவல்துறை ஆய்வு கூட்டத்தில் தமிழக DGP சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது...

காஞ்சிபுரம் சரக காவல்துறை ஆய்வு கூட்டத்தில் தமிழக DGP சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது...

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சரகத்திற்கு உட்பட்ட ,(காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்) காவல்துறை ஆய்வுக்கூட்டம் காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது .இதில் 1. குற்றங்களை தடுப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அதனை மேம்படுத்துவது குறித்தும் 2.பழைய குற்றங்களை கண்டுபிடிப்பதற்காக மூன்று மாவட்டங்களில் மேற்கொண்ட செயல்பாடுகள் 3. சட்டம் _ ஒழுங்கினை பேணி காத்திட ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது முழுவீச்சில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் 4. பாதுகாப்பான சாலைப் பயணம் 5.இணையதள குற்றங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் 6. பொதுமக்கள் கொடுக்கப்படும் புகாரின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு அவர்களின் குறைகளை களைய எடுக்கப்பட்டு வரும் செயல்பாடுகள் 7. தொடர்ந்து பணி செய்து கொண்டிருக்கும் காவலர்களுக்கு வாரந்தோறும் ஒரு நாள் விடுமுறை கிடைத்திடவும் மேலும் அவர்களின் நலன் காக்க மேற்கொள்ளவிருக்கும் செயற்பாடுகள் குறித்து தமிழக DGP சைலேந்திரபாபு இந்த கூட்டத்தில் ஆய்வு செய்தார் இந்த கூட்டத்தில் IG சந்தோஷ் குமார் ,DIG சத்யபிரியா ,காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ,திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் . இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பு மூன்று மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையை சேர்ந்த காவல் ஆய்வாளர்கள், ஒரகடம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேந்திர குமார், மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் மணிமாறன், மதுராந்தகம் காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ADSP வெள்ளத்துரை, தனிப்படை உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார், முரளி, வினோத், சீனிவாசன், பஞ்சாட்சரம் , காஞ்சிபுரம் தாலுகா உதவி ஆய்வாளர்கள் ராஜமாணிக்கம், கங்காதரன், செல்லப்பிள்ளை, தலைமை காவலர் சிவராஜ் என 50 க்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு DGP சைலேந்திர பாபு அவர்கள் ஊக்கப்படுத்தி, பரிசுகள் வழங்கினார்.

VIDEOS

RELATED NEWS

Recommended