Author: ஆர்.தீனதயாளன்

Category: மாவட்டச் செய்தி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் உள்ள முருகப்பெருமானை தினந்தோறும் சாமிதரிசனம் செய்ய ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கோவில் நிர்வாகத்தின் அறிவுறுத்தல் படி கோவிலில் உள்ளே பக்தர்கள் கைபேசி பயன்படுத்தக் கூடாது என்று நிர்வாகம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் கோவிலின் தெற்கு வாசலில் உள்ள பாதுகாப்பு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் கைபேசியை கொடுத்துவிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின்னர் திரும்ப கைபேசியை பெற்றுக் கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் 1 கைபேசிக்கு ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளதாகவும், பக்தர்களின் கைப்பேசியில் பாதுகாப்பாக இருப்பதாகவும் ,சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags:

#Thanjavurnewstoday , #Thanjavurnewspapertoday , #Thanjavurnewspaper, #Thanjavurnewschannel , #Thanjavurnewsupdate, #Thanjavurlatestnews, #Thanjavurnews , #Thanjavurnewstodaylive , #Thanjavurlatestnews, #papanasamnewstoday #papanasamnews #papanasam #latestnewsinthanjavur , #TheGreatIndiaNews , #Tginews , #news #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #neyvelinewstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்தஞ்சை , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalthanjavur , #todaynewsthanjavurtamilnadu ,,
Comments & Conversations - 0