ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை உச்ச நீதிமன்ற தீர்ப்பு.

நெல்சன் கென்னடி

UPDATED: May 19, 2023, 10:53:23 AM

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிறப்பான வாதத்தை எடுத்து வைத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து ஜல்லிக்கட்டு பேரவை உறுப்பினர்கள் நிர்வாகிகள் வீர விளையாட்டு சங்க நிர்வாகிகள் என அனைவரும் முதலமைச்சரிடம் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை இல்லை என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தமிழக மக்களுக்கு கிடைத்துள்ள சிறப்பான தீர்ப்பு.

ஜல்லிக்கட்டு தமிழர்களின் உணர்வில் கலந்து இருக்க கூடிய விளையாட்டு  ஜல்லிக்கட்டை தடைசெய்ய பீட்டா அனிமல் வெல்பர் போர்டு ஆகிய வை உச்ச நீதிமன்றதில் ஜல்லிக்கட்டை தடை செய்ய வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தமிழர்களின் உணர்வும் போராட்டமும் அலங்கா நல்லூரில் ஆரம்பித்து மெரினா வரை நடைபெற்றது.

தமிழக அரசின் சார்பில் தகுதியான வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் மூலம் இந்த வெற்றி கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த உரிமையை தமிழக மக்களுக்காக முதல்வர் பெற்று தந்து உள்ளார்.

இந்த தீர்ப்பை கொண்டாட கூடிய வகையில் முதலமைச்சரின் அறிவுறுத்தல் படி வெற்றி விழா வருகிற ஜனவரி மாதம் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டியை பிரம்மாண்டமாக நடத்தப்படும் என தெரிவித்தார்.

தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக அரசு அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து அரசு நல்ல முடிவு எடுப்போம் என தெரிவித்தார்

பேட்டி மூர்த்தி பத்திர பதிவுத்துறை அமைச்சர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended