• முகப்பு
  • பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் உச்சநீதிமன்ற நீதிபத??

பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் உச்சநீதிமன்ற நீதிபத??

School

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

டெல்லி: முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி உள்ளார். சுவாமியின் சீனா சந்தேகம் ஆனால் பிபின் ராவத் உள்ளிட்டோர் மரணம் குறித்து நேற்று முதல் பாஜகவை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி சந்தேகம் எழுப்பி வருகிறார். இதுவரை இல்லாத வகையில் எல்லைகளில் சீனாவின் ஊடுருவல் குறித்து மிக அதிகமான கருத்துகளை முன்வைத்தவர் பிபின் ராவத் , ஆகையால் அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்றார் . யூ டியூப் சேனல் ஒன்றுக்கு இது தொடர்பாக பேட்டியளித்த சு.சுவாமி, சைபர் வார்ஃபேர் இந்த விபத்தின் பின்னணியில் இருந்திருக்கலாம் , லேசர் மூலமாக தொழில்நுட்ப கோளாறுகளை ஏற்படுத்தி இருக்கலாம் எனவும் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து தமது ட்விட்டர் பக்கத்தில் பிபின் ராவத் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பி பதிவிட்டுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. மேலும் ராணுவம் விசாரணை நடத்துவதை விட வெளியில் இருந்து அதாவது உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended