Author: THE GREAT INDIA NEWS

Category:

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் நேற்று மீண்டும் தொடங்கியது. அதன்படி, அப்போலோ மருத்துவர் மதன்குமார் இன்று ஆஜராகி சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தார். அப்போது ஜெயலலிதாவுக்கு 2016ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி மாலை ஏற்பட்டது நெஞ்சுவலி தானா என்றும், உயிரை காப்பதற்கான அனைத்து சிகிச்சை முறைகளும் முறையாக அளிக்கப்பட்டதா எனவும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இதற்கு பதிலளித்த மருத்துவர் நெஞ்சுவலி தான் என்றும், அதற்கான சிகிச்சை முறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்றியதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்ப ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியுள்ளார். வரும் 15ம் தேதிக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்ப ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:

Comments & Conversations - 0