நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தொடக்கம்.

பிலிப்ராஜ் ரவி

UPDATED: May 27, 2023, 1:20:38 PM

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தொடங்கி காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, மலா்க் கண்காட்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

இதன் ஒரு பகுதியாக குன்னூா் சிம்ஸ் பூங்காவில் 63 ஆவது பழக் கண்காட்சி 27.5.2023 காலை  சிம்ஸ் பூங்காவில் 63-வது பழ கண்காட்சியின் தொடக்க விழாவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப. அம்ரித், சுற்றுலாத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன்,

நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் பழ கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்கள் இதில் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக பூங்கா நுழைவாயிலில் பலாப்பழம், பப்பாளி, வாழை, எலுமிச்சை, அன்னாசி, ஆரஞ்சு, மாம்பழம் உள்பட 1.5டன் பழங்களைக் கொண்டு 12 அடியில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 18 அடி உயரம் மற்றும் 5 அடி அகலத்தில் பல்வேறு பழங்களால் உருவாக்கப்பட்ட மெகா சைஸ் பைனாப்பிள், பழக்கூடை, மண் புழு, பிரமிடு, மலபாா் அணில் என 3,650 கிலோ பழங்களைப் பயன்படுத்தி பல்வேறு உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended