Author: மகேஷ் பாண்டியன்

Category: கல்வி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில், பரண் பழங்குடி மையத்தின் சார்பில், மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் மாணவர்களுக்கான கோடை கல்வி முகாம், கடம்பூர் தொன் போஸ்கோ மையத்தில், கடந்த 1ம் தேதி முதல் துவங்கி,10 நாட்கள் நடைபெற்றது.

இம்முகாமில் 147 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்களுக்கு நாள்தோறும் திசை வழியாக்கம், குழந்தைகள் பாராளுமன்றம், ஊராளி கலை மற்றும் பண்பாட்டு பயிற்சி, குழந்தை திருமணம் மற்றும் அதன் தீமைகள், கைவினைப் பொருட்கள் செய்தல் மற்றும்

பொம்மலாட்ட பயிற்சி, ஓவியம் மற்றும் சிலம்பாட்ட பயிற்சி மற்றும் நாட்டுபுற கலைப் பயிற்சிகள் உள்ளிட்டு, எழுத்து உருவாக்கம், திறன் வளர்ப்பு, கலைத்திறன், தலைமைத்துவம்உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

பயிற்சி முகாமில், பழங்குடியின மாணவர்கள் முழுமையாக பங்கேற்று, தங்கள் தனித் திறன்களை வெளிப்படுத்தினர்.

10ம் தேதி புதன்கிழமை இம்முகாமின் நிறைவு விழா, கோவை ஆனமலைஸ் டொயோட்டோ நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை துணைத் தலைவர் பி.என். செந்தில் குமார் தலைமை யில்,கடம்பூர் வனச்சரகர் செல்வி இந்துமதி முன்னிலையில் நடைபெற்றது.

மாணவ மாணவியர்க்கு சான்றுகள் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர். பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை கடம்பூர் பரண் மையத்தினர் செய்திருந்தனர்.

Tags:

#erodenews, #erodenewstoday , #erodenewspapertoday , #erodenewspaper, #erodenewschannel , #erodenewsupdate, #erodelatestnews, #erodenews , #erodenewstodaylive , #erodelatestnews, #latestnewsinerode ,#TheGreatIndiaNews , #Tginews , news Tamil news channel , Tamil news Flash , Tamil news live tv , Latest tamil nadu news tamil , Tamil news daily , District news , political news , crime news , News in various districts , tamil news tamil latest news , todays india news tamil political news , aanmegam news , todays tamil nadu news , india business today , erode news today , people struggle , #இன்றையசெய்திகள்ஈரோடு , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalerode , #todaynewserodetamilnadu , #ஈரோடுசெய்திகள்
Comments & Conversations - 0