கோடை மொழியின் காரணமாக குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு.

ராஜ்குமார்

UPDATED: May 11, 2023, 11:49:14 AM

தமிழகத்தில் கோடை காலத்தையொட்டி தென்காசி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அவ்வப்போது மழை பெய்தாலும், கடுமையான வெயிலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் முக்கிய சுற்றுலா தளமாக கருதப்பட்டு வரும் குற்றாலத்தில் அருவிகளில் போதிய நீரின்றி வறண்டு காணப்படுகின்றது.

கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு பெய்த தொடர் கோடை மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. 

மீண்டும் மழை குறைந்ததையடுத்து பழைய குற்றாலம் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து குளிக்கும் வண்ணம் தண்ணீர் கொட்டியது.

நேற்று முன்தினம் மாலையில் பெய்த மிதமான மழையினால் வெயிலின் தாக்கமானது குறைந்து காணப்பட்டாலும் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது.

இதனால் அருவிகளுக்கு ஓரளவிற்கு வந்த தண்ணீரும் முற்றிலுமாக நின்றது. தற்போது பழைய குற்றாலம் அருவியில் மட்டும் குளிக்கும் அளவிற்கு குறைந்த அளவு தண்ணீர் வருகிறது.

மற்ற அருவிகள் அனைத்தும் முழுமையாக வறண்டு பாறையாக காட்சியளிக்கின்றன. அருவி பகுதிகளில் கடைகளை அமைத்துள்ள வியாபாரிகளும் குற்றால சீசன் எப்பொழுது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended