• முகப்பு
  • அரசியல்
  • பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அரசியலை சீர்படுத்துவதற்கு மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் - ஜெகன் மூர்த்தி.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அரசியலை சீர்படுத்துவதற்கு மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் - ஜெகன் மூர்த்தி.

சுரேஷ் பாபு

UPDATED: May 10, 2023, 10:50:15 AM

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த ஆண்டரசன் பேட்டையில் அவருடைய இல்லத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தேசிய தலைவர் கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெகன் மூர்த்தி பிறந்தநாள் விழா மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் நேரடியாக வந்து மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து இனிப்புகளை வழங்கி அவருடைய இல்லத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து பிறந்த நாளை கொண்டாடினார்கள்.

அப்பொழுது புரட்சி பாரத கட்சியின் நிறுவன தலைவர் மூர்த்தியாரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அதை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி வெளிவந்து கிட்டத்தட்ட 98 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் என்று ஊடகங்கள் மூலமாக பார்த்தோம் அதே நேரத்தில் மாணவர்களும் மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்கள்,

தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் படிப்பதற்காக மாணவர்கள்  எங்களிடம் தொடர்பு கொண்டு உள்ளார்கள் ஒவ்வொரு கல்லூரிகளிலும் பி .காம் படிப்பதற்காக மாணவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வும் எழுதி இருக்கிறார்கள் இந்த முறை வெற்றி பெறுவார்கள் என்று அதிகமாக மதிப்பெண் பெறுவார்கள் என்று ஒரு சூழ்நிலை உள்ளது.

நாம் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லுகிறோம் ஆனால் மாணவர்கள் நீட் தேர்வில்  அதிகமாக மதிப்பெண் எடுக்கிற சூழ்நிலை உருவாகி வருகிறது.

வட மாநிலங்களில் தான் நீட் தேர்வு வேண்டுமென்று கேட்கிறார்கள் தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்று நாம் எதிர்த்து கொண்டு இருந்தாலும் ஆனால் இந்தியாவில் தான் தமிழ்நாட்டில் தான் மாணவர்கள் அதிகமாக கலந்து கொள்வதும் அதிகமாக மார்க் எடுப்பதும் உள்ளது.

இன்றைக்கு பன்னிரண்டாம் வகுப்பில் 98 சதவீதம் வெற்றி பெற்று மாணவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம.

இரண்டு சதவீதம் தான் தோல்வியை தழுவி இருக்கிறார்கள் மீண்டும் அவர்கள் தேர்வு எழுதுவதற்காக ஜூன் மாதம் தேர்வு துறை அவர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது.

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் வெற்றி பெற்று தாங்கள் தேர்வு செய்கின்ற கல்லூரிகளிலோ அல்லது பாடப்பிரிவிலோ சேர்ந்து படித்து  நல்ல நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை  அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள், பெரிய பதவிகளில் போவதற்கான அரசியலை சீர்படுத்துவதற்காக மாணவர்கள் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உலக அளவிலே மாணவர்கள் இந்தியாவை தலை நிமிர செய்ய வேண்டும் என்று புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended